என்னுடையவைகள் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்

என்னுடையவைகள் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்

all Mine are Yours, and Yours are Mine, and I am glorified in them. ( John 17:10)

John 10:30; John 5:23; John 11:4; John 12:23; John 16:14,15; 1Corinthians 3:21-23; Philippians 1:20; Colossians 1:15-20; Colossians 2:9.

என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள், அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். (யோவான் 17:10)

யோவான் 10:30; யோவான் 5:23; யோவான் 11:4; யோவான் 12:23; யோவான் 16:14,15; 1கொரிந்தியர் 3:21-23; பிலிப்பியர் 1:20; கொலோசெயர் 1:15-20; கொலோசெயர் 2:9.

உண்மை உறவு:

இயேசுகிறிஸ்து இரண்டாம் ஆதாமாக வந்தார் என்பது விவிலிய செய்தி. முதலில் வந்த ஆதாம் தேவனில் உள்ள விருப்பத்தை நிறைவேற்றாது போனதினால் தள்ளப்பட்டான். இரண்டாம் ஆதாமாகிய இயேசுவோ பிதாவின் உள்ள விருப்பத்தை நிறைவேற்றினார். முதலாம் ஆதாம் தேவனுக்குரியதைக் கொள்ளையாட முயற்சி செய்து தள்ளப்பட்டு போனான். இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவோ பிதாவினுடையவைகளை கொள்ளையாடின பொருளாக எண்ணாது எல்லாவற்றையும் துறந்தவராய் வெளிப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டார். முதலாம் ஆதாம் தேவனுடைய காணியாட்சிக்குள்ளிருந்தும் சாத்தானோடு உறவு வைத்து சபிக்கப்பட்டவனானான். இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவோ இவ்வுலகில் இருந்தும் ஒருவரையும் நம்பி இணங்காமல் தேவனை மட்டுமே சார்ந்து ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துவாக மாறினார். BLESSED CHRIST. முதலாம் ஆதாம் தன் செய்கைகளுக்காக தேவ சமுகத்திலிருந்து துரத்தப்பட்டு நரகை அடைந்தான். இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவோ தன் செய்கைகளுக்காக தேவ சமுகத்தில் சேர்க்கப்பட்டு பரலோகம் வரையிலும் உயர்த்தப்பட்டார்.

இயேசுகிறிஸ்துவுக்கும் பிதாவாகிய தேவனுக்கும் உள்ள மெய்யான உறவு என்பது இந்த 10 ஆம் வசனத்தில் வெளிப்பட்டுள்ளது. தேவனுடையதை தன்னுடையதாகவும், தன்னுடையதை தேவனுடையதாகவும் கொண்டார் இயேசு. இந்த மனோபாவம் தேவனுடைய உறவை விட்டு வெளியே வர விரும்பவில்லை என்பதை காட்டுகிறது. பிதா தன்னிடம் எதையெல்லாம் கொடுத்தாரோ அத்தனையும் பிதாவினுடையது என்ற உணர்வில் உறுதியாயிருந்தார்.

இந்த உலகம் நம்முடையதல்ல. இது நிலையானதும் அல்ல. இங்கு நாம் நமது நன்மைக்காய் பெற்றுள்ள ஒன்றின் மீதும் பற்று கொள்ளாமல் எல்லாம் அவரிடமிருந்து வந்தது, அவர் என்னை நம்பினதினால் தமக்குரியதை எனக்கு தந்தார் என்ற உணர்வடைந்து தன்னிடம் இருக்கும் அத்தனையுமே தேவனுடையது என்று நம்பி அவரிடம் அனைத்தையும் ஒப்புக்கொடுத்து வாழும் வாழ்க்கையாகும். அதுவே உன்னதமான ஆவிக்குரிய வாழ்க்கை.

எல்லாம் எனதாக்கிக்கொள்ளும் உணர்வு என்னை ஒன்றும் இல்லாதவனாக்கி போடும் என்பதாக மட்டுமல்ல, ஒன்றையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளாமலாக்கிவிடும்.

நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும் போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு, உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன். பிலிப்பியர் 1:20-26.

ADD YOUR COMMENT

Powered By Indic IME