என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்.

Abide in Me, and I in you. ( John 15:4) 

John 6:68; John 8:31; Luke 8:15; Act 11:23; Act 14:22; Colossians 1:22; 1John 2:6,24-28; 2John 1:9; Judgement 1:20,21.

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.  (யோவான் 15:4)

யோவான் 6:68,69; யோவான் 8:31; லூக்கா 8:15; அப்போஸ்தலர் 11:23; 14:22; கொலோசெயர் 1:22; 1யோவான் 2:6,24-28; 2யோவான் 1:9; யூதா 1:20,21.

நிலைத்திருங்கள்:

இடம் சார்ந்தும், காலம் சார்ந்தும், சூழல் சார்ந்தும் பிரிந்துவிடாதபடிக்கு கிறிஸ்துவிலே நிலைத்திருங்கள். அறுத்து எறியப்படாதபடிக்கும், சுத்திகரிக்கப்படும்படிக்கும் அவரில் நிலைத்திருங்கள். நிலைபெயராதிருக்கும் சீயோன் பர்வதம் போல கிறிஸ்துவிலே நிலைத்திருங்கள். சங்கீதம் 125:1,2.

பிழைத்திருப்பதற்காகவும், செழித்திருப்பதற்காகவும், நற்குணங்களில் பெருகுவதற்காகவும், நற்கிரியைகளில் தேறினவர்களாயிருப்பதற்காகவும், மிகுதியான கனிகளை கொடுக்கும் படியாகவும், அவரின் சாயலை தரித்துக் கொள்வதற்காகவும், ஆரோக்கியம் அடையும் படியாகவும் கிறிஸ்துவில் நிலைத்திருங்கள்.

நிலைத்திருத்தல் என்பது கிறிஸ்துவோடு இணைந்திருத்தல் ஆகும். கணவன் மனைவியைப் போல, பெற்றோர் பிள்ளைகள் போல, குரு சிஷயன் போல கிறிஸ்துவிலே இணைந்து வாழ வேண்டும். கிறிஸ்துவோடு வாழ்ந்து, கிறிஸ்துவோடு நடந்து, கிறிஸ்துவோடு பணி செய்து, கிறிஸ்துவோடு மரணித்து, கிறிஸ்துவோடு பிழைத்திருத்தலே நிலைத்திருத்தல் ஆகும்.

கிறிஸ்துவுக்கு வெளியே புது சிருஷ்டிக்கு இன்னொரு அடையாளம் இல்லை. அவருடைய அச்சடையாளங்களை மட்டுமே நம்மில் தரித்துக் கொள்ள வேண்டும். எல்லா அடையாளங்களையும், முறைமைகளையும் சிலுவையில் உரிந்து விட்டார். இனி நாம் அவரால் பிறப்பிக்கபட்ட புது நாற்றுபோல காணப்பட வேண்டும்.

அவரில் நிலைத்து வாழ்வதற்காகவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நாம் நம் வாழ்வை தீர்மானிக்க முடியாது. நாம் அவரில் நிலைத்திருக்கும்போது அவரே நம் வாழ்வை தீர்மானிக்கின்றார்.
நிலைத்திரு…. பிழைத்திரு…..தரித்திரு….. வாழ்ந்திரு….

என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார். அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். 1யோவான் 2:1-6.

ADD YOUR COMMENT

Powered By Indic IME