என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
Let believe also in me. (John 14:1)
John5:23; John 6:40; John 11:25-27; John 13:19; Acts 3:15,16; Ephesians 1:15; Ephesians 3:14-17; Matthew 14:27; Romans 15:13; Hebrews 6:1; 1John3:23.
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். (யோவான் 14:1)
யோவான் 5:23; யோவான் 6:40; யோவான் 11:25-27; யோவான் 13:19; அப்போஸ்தலர் 3:15-16; எபேசியர் 1:15; எபேசியர் 3:14-17; மத்தேயு 14:27; ரோமர் 15:13; எபிரெயர் 6:1; 1யோவான் 3:23
இயேசுவில் விசுவாசம்:
இஸ்ரயேலர் தேவனையும் விசுவாசிக்க வேண்டும், இயேசுவையும் விசுவாசிக்க வேண்டும். தேவனை விசுவாசிக்கிறேன் என்று இஸ்ராயேலர் சொல்வார்களானால் தேவனால் அனுப்பப்பட்ட இயேசுவையும் விசுவாசிக்க வேண்டும். ஏனெனில் இயேசு கிறிஸ்து மட்டுமே பிதாவை காண்பிக்கிறவராகவும் வெளிப்படுத்துகிறவராகவும் இருக்கிறார். தேவனிடம் செல்வதற்கு இயேசு மட்டுமே வழியாகவும் ஒளியாகவும் இருக்கிறார். தேவனிடமிருந்து எந்த நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் இயேசுவினால் மட்டுமே சாத்தியமாகும். தேவனை அறிகிற அறிவை அடைய இயேசுவை நம்பி ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நீங்கள் என்னை நம்புங்கள் என்று பல தடவைகளில் இஸ்ராயேலருக்கு சொல்லியும் அவர்கள் அவரை சிலுவைக்கு கொண்டு போவதில் குறியாக இருந்தார்கள். அதுபோலவே இக்காலத்திலும் கர்த்தராகிய இயேசுவை நம்புங்கள் என்று கிறிஸ்துவின் ஊழியக்காரர்களினால் பாரெங்கும் அறிவிக்கப்படுகிறது. ஆனால் அவரை ஏற்றுக் கொள்ளாமல் அறிவிக்கின்ற அறிவிப்பாளர்களை அழிக்கவே முனைகின்றனர்.
முழு உலகமும் யெகோவா தேவனால் படைக்கப்பட்டது என்றும் அவரால் சகல நன்மைகளும் உண்டாகின்றது என்றும் பாவத்திலிருந்து விடுபட்டு நித்திய வாழ்வுக்கு செல்வதற்கு அவரால் உருவாக்கப்பட்ட வழியே இயேசு என்றும் நம்பி இந்த உலகம் இயேசுவை ஆண்டவர் என்று இரட்சகர் என்றும் விசுவாசிப்பதினால் மட்டுமே உய்வடைய முடியும் என்று சொல்லும் படியாகவே இயேசு அறிவிக்கப்படுகிறார்.
யார் தடுத்தாலும் இந்தத் தொனி தொனித்துக்கொண்டே இருக்கும். இதை ஒருவரும் தடுக்க முடியாது. இயேசுவை நம்புவதே நித்திய வாழ்வுக்கான வழி.
கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் நீதி உண்டாக இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் வாயினாலே அறிக்கையிட்டு அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் விற்கப்படுவது இல்லை என்று வேதம் சொல்லுகிறது என்றும் கிரேக்கர் என்றும் வித்தியாசமே இல்லை எல்லாரும் கர்த்தர் அவர் தமிழ் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார் ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்: ரோமர்10:9-13.