ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்.
No one can come to Me unless it has been granted to him by My Father. (John 6:65)
Jn6:37,44,45; Jn10:16,26,27; Jn12:37-41; Eph2:8,9; Phil2:13; 1Tim1:14; 2Tim2:25,26; Tit3:3-7; Heb12:2; Jas1:16-18.
ஒருவன் என் பிதாவின் அருளைப்பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார். (யோவான் 6:65)
யோவான் 6:37,44,45; யோவான் 10:16,26,27; யோவான் 12:37-41; எபேசியர் 2:8,9; பிலிப்பியர் 2:13; 1தீமோத்தேயு 1:14; 2தீமோத்தேயு 2:25,26; தீத்து 3:3-7; எபிரெயர் 12:2; யாக்கோபு 1:16-18.
பிதாவின் அருள்:
இவ்வசனத்தில் கீழ்கண்டவாறு பொருள்தரவியலும்.
பிதாவினால் கிருபை பெறுதல், பிதாவினால் அனுமதி பெறுதல், பிதாவினால் அழைக்கப்படுதல், பிதாவினால் தெரிந்துகொள்ளப்படுதல், பிதாவினால் நியமிக்கப்படுதல் என்பதாகும்.
இயேசுகிறிஸ்துவை ஏற்றுகொள்வதற்கும், இயேசுகிறிஸ்துவோடு வாழ்வதற்கும் பிதாவின் அனுக்கிரகம் தேவை.
பிதாவின் அருள் பெறவேண்டுமானால் பிதாவையும் குமாரனையும் விசுவாசிக்க வேண்டும்.
பிதாவானவருக்குரிய கனத்தை செலுத்துகிறவனே பிதாவின் அனுக்கிரகி ஆகின்றான்.
இரட்சிக்கபடுகிறவர்களை தேவன் அறிந்திருக்கிறார். அவர்களே அவரின் அருள் பெறுகின்றனர்.
நாம் நமது தந்தையின் விருப்பப்படி வாழ கற்றுகொள்ளாவிட்டால் இயேசுவின் அடைக்கலத்துக்குள் வரவியலாது.
தந்தையினால் குமாரன் வாழ்கின்றார். குமாரனால் நாம் வாழ்கின்றோம். நம்மால் இவ்வுலகம் வாழவேண்டும்.
கர்த்தாவே உம் அருளை பெற்று உம் குமாரனின் இரட்சிப்புக்கு சொந்தமாக்கப்பட்டோம். நாங்கள் மருளாது உறுதியாய் நிற்க உதவிடும்.