என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் அதைச் செய்வேன்

என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் அதைச் செய்வேன்.

If you ask anything in My name, I will do it. (John 14:14)

1Kings 3:5; 1Kings 8:29; Matthew 18:19; Act 8:15-17; Ephesians 2:18; Ephesians :12,14,15; Colossians 3:17; Hebrew 7:25; Hebrews 13:15.

என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன். (யோவான் 14:14)

1இராஜாக்கள் 3:5; 1இராஜாக்கள் 8:29; மத்தேயு 18:19; அப்போஸ்தலர் 8:15-17; எபேசியர் 2:18; எபேசியர் 3:12, 14,15; கொலோசெயர் 3:17;எபிரெயர் 7:25; எபிரெயர் 13:15.

ஜெபம்.
ஜெபம் என்பது குறித்து இப்பகுதியானது தேவனிடம் கேட்பது என்று குறிப்பிடுகின்றது. நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவின் தன்மையைப் பொறுத்ததே ஜெபம். நமக்கும் அவருக்கும் தந்தை – மகன் என்ற உறவோ, எஜமான் – வேலைகாரன் என்ற உறவோ, ஆசிரியர் – மாணாக்கர் என்ற உறவோ, நண்பர்கள் என்ற உறவோ இவைகளில் ஏதாவது ஒரு முறையில் காணப்படலாம். அதற்கேற்றாற்போலவே நமது ஆவிக்குரிய வளர்ச்சியும், அனுபவங்களும் காணப்படும்.

பாவம் வந்தபோது நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவு அறுந்துபோனது. கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினால் பாவம் பரிகரிக்கப்படும்போது மட்டுமே தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவு உண்டாகின்றது. இந்த உறவினிமித்தம் நாம் பிள்ளைகளாகவும் அவர் தந்தையாகவும் கிறிஸ்து நமது மத்தியஸ்தராகவும் அறியபடுகின்றது. பாவம் நன்மைகளை சிதைத்து போட்டதினால் எல்லா நன்மைகளும் ஜோதிகளின் பிதாவினிடமிருந்தே வரவேண்டியதாயுள்ளது. எனவே நாம் பிதாவிடம் கேட்கும்போது இயேசு நமக்காய் செய்த பரிகார நறுமணம் நம்மிலிருந்து கமழ்வதை தேவன் முகர்கின்றார். என்னிடம் நன்மைகள் இல்லை என்பதையும், எனக்கு அது தேவை என்பதையும் அவர் அறிகின்றார். அப்பொழுது நான் கேட்பதைக் கொடுக்க அவர் விரும்புகின்றார்.

என்னில் உண்டாகும் முழுமையான மாற்றத்தை உணர்ந்து அறிந்து கொள்வது வரையிலும் நாம் அவரிடமிருந்து எதையும் பெற முடியாது. நீதிமொழிகள் 28:4.7,9; நீதிமொழிகள் 21:13.
அவர் கொடுப்பவர்தான். நமக்காகதான் வைத்துள்ளார். தமது இரக்கத்தினிமித்தம் நமக்கு கொடுக்க விருப்பமுள்ளவர்தான். ஆனால் என்னில் உள்ள பாவ கறைகள் முழுவதும் நீக்கப்பட்டிருக்க வேண்டும். குணங்கள் மாறியிருக்க வேண்டும். குழந்தையாக மாற வேண்டும். கேள்… கொடுப்பார்.

என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். நீதிமொழிகள் 8:17-21.

ADD YOUR COMMENT

Powered By Indic IME