ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்

ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

If anyone serves Me, him My Father will honor. (John 12:26)

Jn14:21-23; Mt19:27-30; 1Sam2:30; Pro27:18; Isa44:26; Isa54:17; Eze48:11; Rev7:3; Rev22:3,4.

ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். (யோவான் 12:26)

யோவான் 14:21-23; மத்தேயு 19:27-30; 1சாமுவேல் 2:30; நீதிமொழிகள் 27:18; ஏசாயா 44:26; ஏசாயா 54:17; எசேக்கியேல் 48:11; வெளி 7:3; வெளி 22:3,4.

கனம் பண்ணுவார்:
கிறிஸ்துவை முழுமையாய் பின்பற்றி அவருக்கு ஊழியம் செய்கிறவன் இயேசுகிறிஸ்துவின் பிதா அவருடைய குமாரனை கனப்படுத்தியதுபோல கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவனையும் கனப்படுத்துவார். அவருக்கு ஊழியம் செய்தல் என்பது இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு கற்று கொடுப்பதும், அவருடைய பணியில் பிறரை நிலை நிறுத்துவதுமாகும். இந்த காரியத்தை பவுலின் திருப்பணிகளிலே நாம் காண முடியும். கனம் பண்ணுவார் என்பது கிறிஸ்துவால் கொடுக்கப்படுகிறதல்ல, பிதாவினால் கொடுக்கப்படுகிற மேன்மையாகும். அதாவது, நித்திய உறவில் கிறிஸ்துவோடு கூட இருப்பதுு (மத்தேயு 20:23). இதனையும் பிதாவே முடிவு செய்கிறார். 2 வதாக, இங்கே செய்தவைகள் யாவற்றுக்குமான பரிசு மகிமையைலே கர்த்தரால் கனப்படுத்தப்படுவதாகும்.

இதனையும் பிதாவானவரே செய்கிறார். அறிக்கைப்பண்ணப்படுதல் இயேசுவால் உண்டாகும் (மத்தேயு 10:32,33). கனப்படுத்தல் பிதாவினால் உண்டாகும் (1கொரிந்தியர் 2:9). ஆகவே இது நித்தியம் சார்ந்ததுவேயாகும்.

அவருடைய ஊழியக்காரர் அவருடைய திருப்பணியை செய்யவே அழைக்கப்பட்டனர். அவர் அவரது ராஜ்ய பணியை நம்மிடம் தந்துள்ளார். அவர் செய்ததுபோலவே நாமும் செய்ய வேண்டும்.

மகிமைக்கென்று பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள் மகிமைக்கான பணியை செம்மையாய் செய்வார்களெனில் அவர்கள் மகிமையிலே கனப்படுத்தப்படுவார்கள். கனப்படுத்தபடுதல் என்பது மதிப்பிடப்பட்டு மரியாதை கொடுக்கப்படுதல் ஆகும். அவரின் கற்பனைகளை எவ்வளவு மதிப்பிற்குரியதாக கருதி அதற்கு கீழ்படிந்து அதன்படி நடக்கிறோமோ அப்படியே நமது ஊழியமும் தேவனால் மதிப்பிடப்பட்டு அதற்குரிய மரியாதை செய்யப்படும் என்பதாகும்.

மத்19:27-30 ல் சொல்லப்பட்டுள்ளவைகள் மறுஜென்ம காலத்தில் கிடைப்பதாகும். அதே வேளையில் இங்கே நமக்கு கிடைப்பது யாவும் தேவ இராஜ்ஜியத்தின் வளர்ச்சி சார்ந்ததாக இருக்குமேயன்றி நம் தனி நபர் சார்ந்ததாக இருக்காது. எல்லாம் மகிமையை சார்ந்தே காணப்படும். கோதுமை மணியைபோல மரணத்தையும் சந்திக்க ஆயத்தமாகும் ஊழியன் இங்கே மரண வாசனையை சுமந்து திரிந்தாலும் ஜீவ வாசனையும் சுமந்து திரிவதினால் மறுமையிலே பிதாவானவர் தமது தூதர்கள் முன்பாக அவனை கனப்படுத்துவார்.

அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; எங்களுக்கு என்னகிடைக்கும் என்றான்.

அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார். மத்தேயு19:27-30.

ADD YOUR COMMENT

Powered By Indic IME