என் இராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதானால் என் ஊழியக்காரர் போராடியிருப்பர்.
If My kingdom were of this world, My servants would fight. (John 18:36)
Genesis 6:3; Genesis 32:25; Proverb 28:4; Romans 7:23; Romans 15:32; 1Corinthians 9:25; Colossians 2:1; Colossians 4:12; 1 Timothy 1:11; 1 Timothy 6:12; 2 Timothy 4:7; Hebrew 12:4; Job 14:14; Ephesians 6:12; Philippians 1:30.
இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே, இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். (யோவான் 18:36)
ஆதியாகமம் 6:3; ஆதியாகமம் 32:25; நீதிமொழிகள் 28:4; ரோமர் 7:23; ரோமர் 15:32; 1கொரிந்தியர் 9:25; கொலோசெயர் 2:1; கொலோசெயர் 4:12; 1 தீமோத்தேயு 1:11; 1தீமோத்தேயு 6:12; 2 தீமோத்தேயு 4:7; எபிரெயர் 12:4; எபிரெயர் 14:14; எபேசியர் 6:12; பிலிப்பியர் 1:30.
கிறிஸ்துவின் இராஜ்யம் – 2:
நாம் போராடும்படி அழைக்கப்பட்டுள்ளோம்.
மாம்ச பிரகாரமாகவோ, உலகபிரகாரமாகவோ தீமைகளை எதிர்த்து போராடும்படியாக விவிலியம் நமக்கு போதிக்கவில்லை. ஆனால் ஆவிக்குரிய பிரகாரமாக நாம் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று போதிக்கின்றது.
ஆதியிலிருந்தே பிசாசானவன் தேவனுடைய கிரியைகளுக்கு எதிராக போராடி வருகின்றான். நேரடியாக தேவனோடும், தேவனுடைய குமாரனோடும், தேவனுடைய ஆவியோடும் போராடுவதற்கு துணிகரம் கொண்டுள்ளவனாக இருக்கின்றான். இக்காலத்தில் மதவாதிகளின் போராட்டங்களுக்கு பின்புலத்தில் இந்த ஆவிகளேயுள்ளன என்பதை மறக்க வேண்டாம்.
இந்த பிசாசுகளின் போராட்டங்கள் இருவகைப்படும். முதலாவது தேவன்மேல் கொண்டுள்ள கோபத்தினால் தேவனை சார்ந்தவர்கள் மீது மனிதர்களை கொண்டும், பாவத்தைக் கொண்டும் போராடுகின்றான். இரண்டாவதாக சாத்தானைப் பின்பற்றுகிறவர்கள் மீதும் போராட்டத்தை தொடுக்கின்றான். சாத்தானுக்குள் இரண்டு குணங்கள் உண்டு. ஒன்று வாழவைத்து தாளதள்ளுவது, இன்னொன்று எவர் தனக்கு பிரியமாயிருக்கிறாரோ அவரை மட்டுமே மேம்படுத்தி மற்றவர்களை அடிமைப்படுத்துவது. இதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே. அவர்கள் மீதி அவன் தொடுக்கிற போராட்டம் இருக்கட்டும். நாம் தேவனுக்கு எதிராக எழும்பும் சாத்தானின் இத்தகைய போராட்டங்களை அடையாளம் கண்டு எதிர்த்து போரிடவே தேவன் விரும்புகின்றார். இதற்காகவே தேவன் தமது ஜனத்தை ஆயத்தப்படுத்துகின்றார்.
நம்மை எதிர்த்து போராடுகின்ற மனிதர்களோடு நாம் போராடவேண்டியதில்லை. காட்டில் சிங்கம் உள்ளதென்றால் நாம் பாதுகாப்போடு செல்லவேண்டும். இயல்பாகவே சிங்கம் நம்மை கொல்லும். இதற்காக சிங்கத்தை எதிர்த்து போராடமாட்டோம். அதுபோலவே நமக்கெதிராக எழும்பும் மனிதர்கள், ஆட்சியாளர்கள் மீது நாம் போராட்டத்தை தொடுக்க வேண்டியதில்லை. காரணம் அவர்களல்ல, அவர்களுக்குள் உள்ள தீய ஆவியின் குணங்களே அவர்களை இவ்விதம் செய்ய தூண்டுகின்றது. எனவே அவர்களை இயக்கும் தீய ஆவிகளோடு நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். பவுல் நான் தனி ஜெபங்களில் போராடுவதுபோல நீங்களும் போராடுங்கள் என்று கூறுவதுபோல நாம் போராட வேண்டும்.
இது கண்களுக்கு புலப்படாத போராட்டம். நடைமுறையில் செயல்படுத்தபடவியலாத போராட்டம். நமக்கு எதிராக வரும் மனிதர் மீது அன்பையும், அவரை இயக்கும் தீய ஆவியின் மீது எதிர்ப்பையும் செயல்படுத்தக்கூடிய போராட்டம். இது நிஜ உலக போராட்டம் அல்ல, ஆவி உலக போராட்டம். அனேக நேரங்களில் நமக்கு பிடிக்காதவர்கள் மேல் வெறுப்பை காண்பிக்கும் நடைமுறைக்கு நாம் வந்துவிட்டோம். இது தவறானது. மனிதத்தை நேசிப்போம். மனிதத்தை இயக்குகிற மூலபாவத்தை, மூல ஆவியை எதிர்த்து ஜெபங்களிலும் உபவாசங்களிலும் போரடுவோம். நாம் கூட்டம் நடத்தி சாத்தானுக்கு எதிராக போராடுவதைவிட தனிதனியாக சாத்தானின் கிரியைகளுக்கு எதிராக போராடும் படியாக கற்பிப்பதுவே இக்காலத்தில் சிறப்பானது. இயேசுகிறிஸ்து இதையே செய்தார். நாமும் இதையே செய்வோம்.
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். எபேசியர் 6:10-18.