உலகம் உண்டாகிறதற்குமுன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமை

உலகம் உண்டாகிறதற்குமுன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமை.

O Father, glorify Me together with Yourself, with the glory which I had with You before the world was. (John 17:5)

John 1:1-3; John 8:58; Matthew 25:34; 1Peter 1:20; Revelation 13:8; Philippians 2:6-8; Colossians 1:14-20; 1 Timothy 3:16.

பிதாவே, உலகம் உண்டாகிறதற்குமுன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். (யோவான் 17:5)

யோவான் 1:1-3; யோவான் 8:58; மத்தேயு 25:34; 1பேதுரு 1:20; வெளி 13:8; பிலிப்பியர் 2:6-8; கொலோசெயர் 1:14-20; 1 தீமோத்தேயு 3:16.

உலகம் உண்டாகுமுன்பே:

விவிலியத்தில் வரையப்பட்டுள்ள தேவனின் படம் இவ்வுலகில் வேறு எங்கும் காணமுடியாது. விவிலியம் மனிதர்க்கு கொடுக்கப்பட்டுமுன்பதாகவே விவிலிய தேவன் இருந்தவர். இன்னும் சொல்லப்போனால் விவிலியமானது உலகத்தின் தோற்றத்தைக் குறித்து தெளிவாக கூறினாலும் தேவனின் உற்பத்தி ஸ்தானம் குறித்து மௌனமகவே உள்ளது. அப்படியானால் உலகம் உண்டாகுமுன்பதாகவே விவிலிய தேவன் இருந்தார். அந்த தேவன் இருந்தவராய், இருக்கிறவராய், வருகிறவராய் இருக்கிறார். இதனால் நாம் அவரை ஆதிதேவன் என்று அழைப்போமாக.

ஆதிதேவனின் ஒரேபேறான குமாரனாக வந்த இயேசுகிறிஸ்துவும் ஆதியிலே தேவனோடிருந்தார் என்று விவிலியம் கூறுகின்றது. இவர் ஆதிதேவனின் மடியில் செல்லப்பிள்ளையாக இருந்தார் என்றும் விவிலியம் கூறுகின்றது. அவரின் செல்லப்பிள்ளையாக இருந்தவரை வார்த்தையாகவும், ஞானமாகவும் உருவகித்த விவிலியம் அவரை மனுமகனாகவும் உருவகிக்கிறது. அப்படியானால் மனிதனாக வருமுன்பதாக – உலகம் உண்டாகுமுன்பதாக தேவனுடைய சாயலாகவும், தேவனுடைய ரூபத்தின்படியேயும் காணப்பட்டார். பிதாவாகிய தேவனுக்கு சமமானவராக காணப்பட்டார்.

ஆதிதேவனின் மகனாக வெளிப்பட்ட இயேசுகிறிஸ்து ஆதியிலே தேவனின் மகிமையின் பிரசன்னமாக இருந்தார். தேவனுடைய இராஜ்யத்திலே காணப்பட்டார். ஆனால் ஒருபோதும் தேவனுக்கு தன்னை சமமாக்கியோ, தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்தியோ காணப்படவில்லை. எல்லாம் தேவனுக்கு கட்டுபட்டு இருந்ததுபோல கிறிஸ்துவும் தேவனுக்கு கட்டுபட்டே காணப்பட்டார். தேவனுடைய இராஜ்யத்தில் தேவனின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த இயேசுவையே தேவன் மனிதகுமாரனாக அனுப்பி இரட்சகராகவும், மீட்பராகவும் விளங்க செய்தார். பூமியில் தேவனுடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கும் வித்தை இரத்தம் மூலமாக விதைத்த இயேசுகிறிஸ்துவை பிதாவாகிய தேவன் ஆண்டவராகவும், எல்லா நாமங்களுக்கும் மேலானவராகவும் ஆக்கினார்.

இந்த இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரின் இரத்தத்தால் மீட்கப்பட்டு கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் சேர்க்கப்படுகிறவனே கிறிஸ்துவின் இராஜ்யத்தின் மகிமையை பெறுகின்றான்.

குமாரனாகிய அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. கொலோசேயர். 1:14-20.

ADD YOUR COMMENT

Powered By Indic IME