உலகம் உங்களைப் பகைத்தால் முன்னமே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
If the world hates you, you know that it hated Me before it hated you. (John 15:17)
John 15:23-25; John 3:20; John 7:7; Matthew 5:11; Matthew 10:22; Matthew 24:9; Mark 13:13; Luke 6:22; Hebrew 12:2; James 4:4; 1John 3:1,3,13.
உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். (யோவான் 15:18)
யோவான் 15:23-25; யோவான் 3:20; யோவான் 7:7; மத்தேயு 5:11; மத்தேயு 10:22; மத்தேயு 24:9; மாற்கு 13:13; லூக்கா 6:22; எபிரெயர் 12:2; யாக்கோபு 4:4; 1யோவான் 3:1,3,13.
பகைக்கும் உலகம்:
யோவான் 1:10,11 ல் அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று யோவான் கூறுகின்றார். உலகமும் உலகில் வாழ்ந்த அவருடைய ஜனமும் அவரைப் பகைத்தது. தாம் இளவயதிலே உலகத்தால் கொல்லப்படுவோம் என்பதை அறிந்துதான் தனது இளவயதிலேயே தேவன் தமக்கு முன் வைத்திருந்த அத்தனைப் பணியையும் செய்து முடித்தார். உலகத்தின் – உலகத்தில் வாழும் மக்களின் பகைமைக்கு ஆளான ஒரே இயக்கம் கிறிஸ்தவம் மட்டுமே. கிறிஸ்தவம் மட்டுமே இயேசுவின் இரத்தத்தை மட்டுமல்ல அவரை பின்பற்றியவர்களின் இரத்தத்தையும் கிரயமாக செலுத்தியது. இன்னும் செலுத்திக் கொண்டேயிருக்கின்றது. சாத்தானுடைய பகைமைக்கு எதிராக செலுத்தப்பட்ட விலைகிரயத்தை விடவும் உலகத்துக்கும் உலகமக்களுக்கும் முன்பாக செலுத்தப்பட்ட விலைகிரயம் அளவில்லாதது. இன்றும் இந்த உலகம் அவரையும் அவரது ஜனங்களையும் பகைத்து கொண்டேயிருக்கின்றது. இதனை உணர்கின்ற கிறிஸ்தவன் மட்டுமே உலகத்தை ஜெயித்து அவரோடு பயணிக்க முடியும்.
எப்பொழுதும் நன்மைக்கும், நற்காரியங்களுக்கும், நற்செயல்களுக்கும், நல் வார்த்தைகளுக்கும் உலகம் மரியாதை கொடுப்பதில்லை. கிறிஸ்தவம் அன்பின் மதம் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் கட்டுபாடுகளும், கடிந்துகொள்ளுதலையும் விட்டு கொடுக்காத மதம். சமரசம் செய்யாத இயக்கம். ஜீவனைக் கொடுப்பதற்கும் துணியும் இயக்கம்.
உலகம் முழுவதும் பொல்லாங்கனின் ஆளுகைக்குள் கிடக்கிறது. தீமையே அவைகளின் கனி. இந்த நிலைமைகளினூடே நற்கனியை மட்டுமே கொடுக்கும் கிறிஸ்தவத்தை உலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும்? சாத்தானுக்கும் உலகிற்கும் ஒரு குணம் உண்டு. தங்களை பின்பற்றுகிறவர்களை அழிய கொடுத்தாலும் பரவாயில்லை, கிறிஸ்தவம் தழைக்கலாகாது. அது அழைக்கப்பட்டேயாக வேண்டும் என்பதாகும்.
ஆனாலும் கிறிஸ்து விதையாக உள்ளார். வசனம் விதையாக உள்ளது. சாகடித்தாலும் முளைத்தே தீரும்.
உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். 1யோவான் 3:15-18.