இயேசு தேவகுமாரனென்று விசுவாசிக்கிறவனே உலகத்தை ஜெயிக்கிறவன்

இயேசு தேவகுமாரனென்று விசுவாசிக்கிறவனே உலகத்தை ஜெயிக்கிறவன்.

Who is he who overcomes the world, but he who believes that Jesus is the Son of God? (1John 5:5)

Deu 10:12,13; Matthew 16:16; John 9:35; Acts 8:37; 1Corinthians 15:57; Galathians 1:4; Galathians 6:14; Ephesians 6:16; 1Thessolonians 2:13; 2Timothy 4:10; Hebrew 10:39.

இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? (1 யோவான் 5:5)

உபாகமம் 10:12,13; மத்தேயு 16:16; யோவான் 9:35; அப்போஸ்தலர் 8:37; 1கொரிந்தியர் 15:57; கலாத்தியர் 1:4; கலாத்தியர் 6:14; எபேசியர் 6:16; 1தெசலோனிக்கேயர் 2:13; 2தீமோத்தேயு 4:10; எபிரேயர் 10:39.

ஜெயிக்கிறவன் யார்?

விசுவாசிக்கிறவனே ஜெயிக்கிறவன். விசுவாசம் என்பது என்ன? பற்றிக்கொள்வது, பிடித்து நிற்பது, தொடர்ந்து செல்வது ஆகும். யாரை விசுவாசிக்க வேண்டும்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும். அவரை எப்படி விசுவாசிப்பது? காணவியலாத தேவனை காண்பிக்கும்படியாக தேவனுடைய குமாரனாக வந்தார் என்று சொல்லுவது, பற்றி நிற்பது, அதில் தொடர்ந்து செல்வது ஆகும். இந்த மனிதனே உலகத்தை ஜெயிக்கிறவன் ஆவான். இந்த விசுவாசத்தை தான் இயேசு கிறிஸ்து நமக்குள் துவங்கி முடிக்கிறார். இந்த விசுவாசத்தைதான் பரிசுத்த ஆவியானவர் வரமாக நமக்கு தருகின்றார். இந்த விசுவாசத்தையே விவிலியம் நமக்கு போதிப்பிக்கின்றது.

இயேசு கிறிஸ்து உலகத்தை ஜெயிப்பதற்கும் இந்த விசுவாசத்தையே பயன்படுத்தினார். தான் தேவனை காண்பிப்பதற்கு தேவனால் அனுப்பப்பட்ட தேவகுமாரன் என்று நம்பினார். அதையே போதித்தார். கொலை செய்ய தீர்ப்பிட்டும் அதையே அறிக்கையிட்டார். ஆகையினால்தான் அவர் உலகத்தை ஜெயித்தார். உலகத்தை காண்பித்து இயேசுவை வீழ்த்த நினைத்த சாத்தான் தோற்றுப்போனான். உலகத்தை சொந்தமாக்க தன் சுய வழியை திணிக்க வந்த சீடர்கள் கடிந்துக் கொள்ளப்பட்டனர். பின்னாக தள்ளப்பட்ட சாத்தானாக கருதப்பட்டனர். உலகத்தை நாடிப்போன ஊழியர்கள் ஆதிசபையானது பின்வாங்கிப்போனவர்கள் என்று முத்திரை குத்தியது. வரலாறு விசுவாசத்தை உயிரோடு வைத்துள்ளது. நாமும் இந்த விசுவாசத்தை உயிரோடு வைத்திருக்க பாடுபட வேண்டும்.

உலகத்தை சொந்தமாக்கவும் உலகத்தின் ஐசுவரியத்தை சுதந்தரிக்கவும், உலகத்தின் பொருளாதாரத்தை பெருக்கவும் விசுவாசத்தை பயன்படுத்த விவிலியம் போதிக்கவில்லை. உலகத்தின் காரியங்கள் யாவும் கீழ்படிதலினால் கிடைப்பது ஆகும். விசுவாசமோ இயேசுவை தேவகுமாரனாக சுமந்து செல்லும் ஆயுதம். இது கேடகமாகும். இந்த விசுவாசத்தை கொண்டிருக்கிற ஒருவரில் உலகம் உள்ளே நுழையாது – நுழைய இயலாது. கீழ்படிதலினால் கிடைப்பதை இயேசுவின்மேல் வைக்கும் விசுவாசத்தினால் இழக்கவும் துணிவோம். விசுவாசத்தைக் கொண்டு உலகத்தை ஜெயிக்கவே இயேசுவும் ஆதிசபையும் போதிக்கின்றது.

ஆதிசபை காலத்திலிருந்து இயேசுவை கிறிஸ்து என்று சொல்லவும், தேவனுடைய குமாரன் என்று சொல்லவும், ஆண்டவர் என்று சொல்லவும் பக்தர்கள் தங்கள் உயிரை துறந்துள்ளார்கள். உடமையை இழந்தார்கள். உறவை இழந்தார்கள். அப்படிபட்ட விசுவாச பாதையை ஆதி சபையின் காலத்திலிருந்தே புறக்கணிக்கின்ற மக்கள் கூட்டம் சபைகளில் பெருகி துர் உபதேசங்களாக மலிந்துக் காணப்படுகின்றன. இக்காலத்தில் இயேசுவை தேவனுடைய குமாரன் என்றும், இயேசுவே மெய்யான தேவன் என்றும் துணிந்து உரக்க சொல்லுகிறவர்கள் குறைந்து போயுள்ளனர். தேவகுமாரனாகிய இயேசு பூமியில் வரும்போது இயேசுவை தேவகுமாரன் என்று சொல்லுகின்ற விசுவாச தளகர்த்தர்கள் காணப்படுவார்களோ என்னவோ தெரியவில்லை.

உலகம் எனக்கு பாத்திரமாய் இருப்பதற்கு நான் இயேசுவை பின்பற்றவில்லை. இயேசுவுக்கு பாத்திரமாய் இருப்பதற்காகவே நான் அவரை பின்பற்றுகிறேன். உலகத்தின் காரியங்களை நான் அவருக்கு கீழ்படிந்து பெறுகின்றேன். அவைகள் கீழ்படிதலினால் கிடைத்தது. ஆகவே அவைகளை இயேசுவுக்காய் இழக்கவும் துணிவேன்.

அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். யோவான் 6:67-70…

இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார். எபிரேயர் 11:39,40..

ADD YOUR COMMENT

Powered By Indic IME