இது இயேசு கிறிஸ்துவின் உறவுகாரர் வீட்டு கலியாணமாக இருக்கலாம்.
இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். (யோவான் 2:2)
மத்தேயு 10:40-42; மத்தேயு 12:17-21; மத்தேயு 25:40,45; லூக்கா 7:33-50; 1கொரிந்தியர் 7;39,40; 1 கொரிந்தியர் 10:31-33; கொலோசெயர் 3:16,17; வெளி 3:20.
எப்படியாயினும்…
இயேசு வீட்டுக்கு அழைக்கப்பட்டார்.
1. சகேயு இயேசுவை தன் வீட்டுக்கு அழைத்துப் போனான். லூக்கா 19
2. ஒரு பரிசேயன் இயேசுவை தன் வீட்டுக்கு அழைத்துப் போனான். லூக்கா 7:36f
3. கானாவூர் கலியான வீட்டார் இயேசுவை அழைத்தனர். யோவான் 2:2
4. நூற்றுக்கு அதிபதி இயேசுவை தன் வீட்டில் அழைத்தான். மத்தேயு 8:5f
5. பேதுருவின் மாமி வீட்டுக்கு இயேசு போனார். மத்தேயு 8:14f
6. மரித்த லாசருவின் வீட்டுக்கு இயேசு அழைக்கபட்டார். யோவான் 11:3
இன்னும் பலர் இயேசுவை தங்கள் வீட்டுக்கு அழைத்ததுண்டு.
நீ யாராயிருந்தாலும் அவரை உன் வீட்டுக்குள் அல்லது உன் உள்ளத்துக்குள் அழை.
அவர் மொழி,இனம், ஜாதி, அந்தஸ்து பார்க்க மாட்டார். அழைத்தால் வருவார்.
நாம் இயேசுவை நம் வீட்டுக்குள்ளே அழைத்து அவரை ஏற்றுக்கொள்வோமா?
அவரே உன் வீட்டு வாசலை – இருதய வாசலை தட்டுகிறார். வெளி 3:20
உன் கதவை திறந்து அவரை உள்ளே அழைப்பாயா? உன்னதப்பாட்டு 5:2
இடம் கொடுப்பாயா?
வாழ்வடைய வரவழை…