இயேசு தேவாலயத்துக்குப் போய் உபதேசம் பண்ணினார்

இயேசு தேவாலயத்துக்குப் போய் உபதேசம் பண்ணினார்.

Now about the middle of the feast Jesus went up into the temple and taught. (John  7:8-14) 

Ps 26:8; Ps40:8; Isa42:1-3; Pr29:25; Gal2:12,13; 2Tim2:9-13; Num29:12,13,17,20,23-40; Hag2:7-9; Mal3:1; Mt21:12-16; Jn8:2; Jn18:20.

இயேசு தேவாலயத்துக்கு போய் உபதேசம் பண்ணினார். (யோவான் 7:8-14)

சங்கீதம் 26:8; சங்கீதம் 40:8; ஏசாயா 42:1-3; நீதிமொழிகள் 29:25; கலாத்தியர் 2:12,13; 2தீமோத்தேயு 2:9-13; எண்ணாகமம் 29:12,13,17,20,23-40; ஆகாய் 2:7-9; மல்கியா 3:1; மத்தேயு 21:12-16; யோவான் 8:2; யோவான் 18:20.

இயேசு உபதேசித்தார்:

எங்கே உபதேசித்தார்?
தேவாலயத்தில் உபதேசித்தார். உபதேசித்த காலம் எது? கூடாரபண்டிகை காலம் ஆகும். தேவாலயத்துக்கு போனவிதம். அந்தரங்கமாய் சென்றார்.
பிந்தி போனார்.
பிந்தி போனதினால் மனித உள்ளங்களின் தாறுமாறுகளை அறிந்தார்.
உபதேசத்தின் தன்மை.
கிறிஸ்துவை அனுப்பிய பிதாவினுடையது.

இயேசு உபதேசித்தார்.

  • தன்னை ஏளனபடுத்திய குடும்பத்தாருக்கு உபதேசித்தார்.
  • தன்னை பின்பற்றிய சீஷர்களுக்கு உபதேசித்தார்.
  • இயேசுவை தேடிவந்த ஆர்வ கூட்டத்தாருக்கு உபதேசித்தார்.
  • பண்டிகை கொண்டாட வந்த யூதருக்கு உபதேசித்தார்.
  • இயேசுவை அவதூறாக தூற்றிதிரியும் மக்களுக்கு உபதேசித்தார்.
  • இயேசுவுக்கு எதிராக சதிவலை பின்னி கொண்டிருக்கும் சமய தலைவர்களுக்கு உபதேசித்தார்.
  • ஆச்சரிய கூட்டத்தாருக்கு உபதேசித்தார். 
    எவர் எப்படியிருந்தாலும் அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு, யாரையும் புண்படுத்தாமல், பக்குவமாய் அவர் பிரசங்கிக்கவில்லை.
    மாறாக கடிந்துகொண்டு, தேவ இராஜ்ய செய்தியைக் கேட்கும் யாவரும் மனந்திரும்பி தேவனுடைய வழியில் வரும்படியாக பிரசங்கித்தார். இச்செய்தியில் சுவையில்லை,
    ஆனால் சாரமிருந்தது, காரமிருந்தது, ஈரமிருந்தது.
    கேட்டவர்கள் அவருக்கு எதிராகவே எழும்பினர்.
    அன்பான ஊழியரே, கேட்பவர்களுக்காக அல்ல, கொடுத்தவருக்காக நாம் உபதேசிக்கிறோம் என்பதை மறவாதீர்.

கர்த்தாவே, உம் மகனைபோல நங்கள் உண்மையாய் முகஸ்துதிக்காக அல்லாது இருதய விருத்தசேதனத்துக்காக பிரசங்கம் செய்யும் பக்குவமடைய உம் ஆவியால் நிரப்பியருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME