அவர் உட்கார்ந்து ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்.
People came to Him; and He sat down and taught them. Jn8:2b.
Jn7:14; Jn18:20; Mt5:1,2; Mt26:55; Mk14:49; Lk4:20; 5:3; Lk21:37,38; Act5:21; Act16:13; Jer25:3; Jer26:2; Jer32:33; Jer44:4.
யோவா8:2b. . யோவா7:14; 18:20; மத் 26:55; மாற் 14:49; லூக்4:20; 5:3; 21:37,38; அப்5:21; 16:13; எரே25:3; 26:2; 32:33; 44:4.
உபதேசம் பண்ணினார்.
உபதேசம் என்ற சொல் பு.ஏ ல் 97 தடவைகள் வருகின்றது.
ஒரு ஆசிரியராயிருந்து உபதேசித்தல் ஆகும்.
இங்கே preach என்றல்ல teach என்றே வருகின்றது.
இயேசு கற்றுகொடுக்கும் ஆசிரியராக வந்தார்.
அவர் பரலோகத்தின் பிதாவினால் கற்பிக்கபட்டு, தடம் மாறிபோன யூத சமய மக்களுக்கு செம்மையாய் கற்பிக்கும்படி வந்தார்.
ஏற்கனவே அனுப்பப்பட்டவர்கள் செம்மையாய் இப்பணியை செய்யாததினால் இவரே உபதேசிக்கும்படி வந்தார்.
ஒரு குருவாக அமைந்து உபதேசித்தார். தேவனுடைய இராஜ்ஜியத்தின் செய்தியை உபதேசித்தார்.
உலக காரியங்களை அவர் கற்றுகொடுக்க வில்லை.
உலக காரியங்கள் மேல் நம்பிக்கை வைக்கவும் கற்று கொடுக்கவில்லை. தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், தேவனை தேடும்படியும் கற்றுகொடுத்தார்.
கற்பித்தலும், போதித்தலும், பிரசங்கித்தலும் திருச்சபை ஊழியர்களுக்கு தேவன் தந்துள்ள வரங்கள்.
சபைகளில் கற்பித்தல் என்ற ஒரு பகுதி இருக்க வேண்டும்.
Bible Study என்ற ஒரு நிகழ்வு பல சபைகளில் தற்காலத்தில் இல்லை. அதை ஏற்படுத்தினாலும் விசுவாசிகள் கடந்து வருவதில்லை.
அப்படியே கடந்து வந்தாலும் சரியான முறையில் கற்றுகொடுக்கதக்க தேர்ச்சி ஊழியர்களிடம் இல்லை.
அப்படியே தேர்ச்சி பெற்றவர்களும் திருமறை ஆய்வு வகுப்பு நடத்த முன் வருவதில்லை. இந்நிலை மாற வேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் கற்றுகொடுக்கிறவரே.
அவரிடம் கற்போர் செம்மையாய் கற்பிக்கும் தகுதியுடையோராய் ஆகின்றனர். விவிலியத்தை செம்மையாய், ஒழுங்காய் கற்பிக்கும் ஆசான் பரிசுத்த ஆவியானவரே.
அவரிடம் கற்போர் மட்டுமே சத்தியத்தை அறிந்தவர்களும், சத்திய வாசகருமாயிருக்கின்றனர். எந்த விவிலிய கல்லூரியில் கற்றிருந்தாலும் பரிசுத்த ஆவியின் வெளிச்சம் கொண்டு சீர்தூக்கி பார்க்கும் அனுபவம் இல்லாமல் அவரது வார்த்தைகளை உபதேசிக்க இயலாது. நாம் தேவனை அறியாதவர்களுக்கும் உபதேசிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
சத்தியத்தின் வெளிச்சமே விடுதலையின் வழி.
உண்மை உபதேசத்துக்கு செவிசாய்ப்போம்.
உத்தமராய் வாழ்வோம்.. விடுதலையடைவோம்.
கர்த்தாவே எங்களை புத்திமான்களாக மாற்றவோ கல்விமான்களாக மாற்றவோ நீர் உமது ஆவியை தரவில்லை. கிறிஸ்துவைபோல மாறுவதற்கே உம் ஆவியை தந்துள்ளீர். உமக்கு நன்றி.