உன் ஜனங்களே உன்னை என்னிடம் ஒப்புக்கொடுத்தனர்

உன் ஜனங்களே உன்னை என்னிடம் ஒப்புக்கொடுத்தனர்.

Pilate. Your own nation and the chief priests have delivered You to me. (John 18:35)

John 19:11; Act 2:23; Act 3:13; Act 21:11; Matthew 26:2,45; Matthew 27:2,17; Luke 9:44; Romans 4:25; Romans 8:32; Ephesians 5:2; 1 Timothy 2:6.

பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். (யோவான் 18:35)

யோவான் 19:11; அப்போஸ்தலர் 2:23; அப்போஸ்தலர் 3:13; அப்போஸ்தலர் 21:11; மத்தேயு 26:2,45; மத்தேயு 27:2,17; லூக்கா 9:44; ரோமர் 4:25; ரோமர் 8:32; எபேசியர் 5:2; 1தீமோத்தேயு 2:6.

நீதிமானை ஒப்புக்கொடுத்த சன்மார்க்கர்:

பிதாவாகிய தேவன் மனுகுலத்தின் மீட்புக்காக தமது ஒரே குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை இஸ்ராயேலரிடம் ஒப்புக்கொடுத்தார். இஸ்ராயேலரோ மேசியாவாகவும், உலகமீட்பராகவும் தங்களிடம் வந்தவரை புறஜாதியாரிடம் ஒப்புக்கொடுத்தனர். புறஜாதியாரோ இரக்கமின்றி, விசாரணை செய்து நீதியை நிலைநாட்டாது இயேசுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தனர். நீதிமானாக வந்த இயேசு – நியாயபிரமாணத்தின் நிறைவேறுதலாக வந்த இயேசு நியாயப்பிரமாணத்தை உடையவர்களாகிய சன்மார்க்கர்கள் என்று பெயர்பெற்ற இஸ்ராயேலரால் ஒப்புக்கொடுக்கப்பட்டார்.

இஸ்ராயேலர்கள் இயேசுவை மரணத்துக்காக பிலாத்துவிடம் ஒப்புக்கொடுக்க காரணம் என்ன? பொறாமையினால் இவ்விதம் செய்தார்கள் என்று விவிலியம் கூறுகின்றது. ஆனால் இஸ்ராயேலர்கள் நியாயபிரமாணத்தை புரிந்து கொண்டதற்கு மாறாக இயேசு சில திருத்தங்களைக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் அவைகளைக் குறித்து பிரசங்கித்ததும் அவர்களுக்கு எரிச்சலை எழுப்பியது. மேலும் தேவனை தமது சொந்த பிதா என்று கூறியிருந்ததும் இயேசுவின் மீது அளவில்லா கோபத்தை உருவாக்கியது.

இஸ்ராயேலர்கள் இயேசுவை நீதிமானாக காணவில்லை. ஆனால் புறஜாதியார், பாமர மக்கள், ஆட்சியாளர்களில் சிலர் இயேசுவை நீதிமானாக கண்டனர். ஆகையினால் பிலாத்து கூட இயேசுவை விடுவிக்க முயற்சித்ததுண்டு. ஆனால் சுத்த சன்மார்க்கவாதிகள் இரக்கமற்ற முறையில் பச்சை இரத்தத்தை பரிமாறிக்கொள்ளவும், பச்சை மரத்தை வெட்டவும் துணிந்து விட்டார்கள்.

சன்மார்க்க நெறிமுறைகளினால் கட்டப்பட்ட இருதயத்தில் இரக்ககுணம், அன்பு, கரிசனை, மனிதாபிமானம், போன்றவை இருக்க வாய்ப்பில்லை. ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் அனேகர் சன்மார்க்க நெறிமுறைகளினால் கோபம், மூர்க்கம், எரிச்சல், ஆவேசம், முரட்டுகுணம் உடையவர்களாக காணப்படுகின்றனர். இந்த மனங்களினூடே அன்பை விதைக்க வந்த இயேசு ஒருசில தருணங்களில் சாட்டையை சுழற்றியிருந்தாலும் அன்பைக் குறித்தே பிரசங்கித்தார். அன்பை காண்பித்தார். அப்படியிருந்தும் சன்மார்க்க இருதயமாகிய தரிசு நிலத்தில் அன்பின் நீரூற்று சுரக்க முடியாமல் போனது.

தேவனுடைய ஜனமே நாம் ஒழுங்குமுறைகளை கடைபிடிக்க வேண்டியதுதான். பிரமாண விதிகள் சிலவற்றை ஒழுக்கவியலுக்காக கடைபிடிக்கலாம். ஆனால் அன்பே பிரதானமாக இருக்க வேண்டுமல்லவா? சன்மார்க்கம் அவசியமே. அதில் அன்பின் நதி உருவாகி நீதிமானத்துவத்துக்கு நேராக பயணிக்கலாமே.

நீதிமானை சன்மார்க்கம் ஜெயிக்கக்கூடும். ஆனால் அன்பில்லா சன்மார்க்கம் துன்மார்க்கத்துக்கு இணையாகி தேவனால் தகர்த்தெறியப்படும் என்பதை மறவாதீர். ஆனாலும் சன்மார்க்கராகிய இஸ்ராயேலர் இரட்சிக்கப்படுவார்கள்.

எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது; நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என் பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது. மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே. அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன்.

சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச்செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.

சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.

ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல, அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக்கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள். எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். ரோமர் 9:1-5; ரோமர் 10:1; ரோமர் 11:25; ரோமர் 29-32.

ADD YOUR COMMENT

Powered By Indic IME