பிதாவை உண்மையோடும் தொழுது கொள்ளவேண்டும்.
true worshipers will worship the Father in truth. (john 4:23) Jn1:17; Gen17:1; Jos24:14; 1Sam12:24; 1Chr29:17; Ps17:1; Ps32:2; Ps51:6,10; Ps73:1; Ps85:13-13; Isa10:20; Jer3:10; Jer4:1-4; Act28:25-28.
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். (யோவான் 4:23)
யோவான் 1:17; ஆதியாகமம் 17:1; யோசுவா 24:14; 1 சாமுவேல் 12:24; 1 நாளாகமம் 29:17; சங்கீதம் 17:1; சங்கீதம் 32:2; சங்கீதம் 51:6,10; சங்கீதம் 73:1; சங்கீதம் 85:13-13; ஏசாயா 10:20; எரேமியா 3:10; எரேமியா 4:1-4; அப்போஸ்தலர் 28:25-28.
உண்மையில் தொழுது கொள்ளல்:
இங்கும் IN TRUTH என்றுதான் வருகிறது இதன் வியாக்கியானமும் சிந்திக்கதக்கது.
1. உண்மை என்பது என்ன?
True என்பதற்கும் Truth என்பதற்கும் சிறிய வித்தியாசம் உண்டு.
உண்மை என்பது உள்ளத்தோடு இணைந்த ஒன்று. மேலும் தேவனிடமிருந்து கொடுக்கப்பட்ட செய்தி சத்தியமாக அறியப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவும் சத்தியம் என்றே அறியப்படுகின்றார். பரிசுத்த ஆவியானவர் இந்த சத்தியம், உண்மை, உத்தமத்தை காப்பவராகையால் சத்திய ஆவி எனப்படுகின்றார்.
2. உண்மையோடு தொழுகை செய்ய வேண்டும் என்பதன் விளக்கம் என்ன?
– வெளிபடுத்தபட்ட பிரமாணத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பிதாவை தொழல்.
– சத்திய ஆவியின் நடத்துதல்படி பிதாவை தொழல்.
– கிறிஸ்து போதித்த சத்தியங்களின் அடிப்படையிலும், கிறிஸ்து நடந்துகொண்ட முறைமைகளின் அடிப்படையிலும் தொழல்.
– ஆதிசபை பின்பற்றியவைகளின் அடிப்படையிலும், சபை வரலாற்றில் எப்போழுதெல்லாம் ஆவியும் – சத்தியமும் இணைந்து வந்து புதுப்பித்தல் உண்டாயிற்றோ அதன் அடிப்படையிலும் தொழல்.
3. உண்மையில் தொழல்.
– உண்மை – சத்தியம் தனக்குள் கொண்டிருந்து தூய்மையாக்கப்பட்ட இருதயத்தோடு பிதாவை தொழல். இதனை Truth in Heart எனலாம். இதனாலேயே உத்தம இருதயம் உண்டாகும்.
வசனம் என்னை உடைக்கும்.
வசனம் என்னை ஊடுருவும்.
வசனம் என்னை சிறைபடுத்தும்.
வசனம் என்னை உருவாக்கும்.
– சத்தியத்தோடு – உண்மையோடு இணைந்து தொழல். சத்தியவான் சத்தியவானின் சத்தம் கேட்பான். உத்தம இருதயம் இன்னொரு உத்தம இருதயத்தோடு பயணிக்கும். இதனை With Truth எனலாம்.
– சத்தியத்தில் – உண்மைக்குள் நின்று தேவனை தொழல்.
உண்மைக்குள் வாழுதலே உத்தம வாழ்க்கை.
ஆவிக்குள்ளும் – உண்மைக்குள்ளும் எவரொருவர் நிலை நிற்கின்றார்களோ, அவர்களே ஆவிக்குரியவர்கள். உண்மைக்குள் நிலை நிற்காமல் ஆவிக்குரிய வாழ்வை வாழ முடியாது.
4. சமீபகால கிறிஸ்தவ தலைவர்கள். சிலர் ஆவியானவரை குறித்து பேசி உண்மையை கண்டுக்காகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.
சிலர் உண்மை என்று பேசி ஆவியானவரை விட்டுவிட்டார்கள்.
சிலர் கிறிஸ்துவை குறித்து பேசி ஆவியானவரை விட்டு விட்டார்கள்.
சிலர் ஆவியானவரை குறித்து பேசி இயேசுவையும், பிதாவையும் விட்டுவிட்டார்கள்.
5. சபை சரித்திர நிகழ்வு.
18 ஆம் நூற்றாண்டின் சபை எழுப்புதலுக்கு காரணம் பரிசுத்த ஆவியின் கட்டுபாட்டுக்குள் சத்தியத்திலே வாழ்ந்ததுவே.
இரண்டும் இன்றைக்கும் இணைந்து வருமானால் சபை இன்றே எழுப்புதலை சந்திக்கும்.
எழுப்புதலின் இரு கண்கள் பரிசுத்த ஆவியும், பரிசுத்த சத்திய உண்மையுமே.
பூமியின் தூழில் தூங்கும் தலைவர்களே எழுவீர்..
எழுப்புவீர்…
எழுப்புதலை காண்போம்…
கர்த்தாவே, உள்ளத்தில் உண்மை இருக்க விரும்பிஉம்முடைய ஆவியையும் தந்தீர். ஆனால் நாங்கள் உண்மையை – உத்தமத்தை புறந்தள்ளிவிட்டு ஆவியிலே நிரம்புகின்றோம் என்று சொல்லி உண்மையில்லாத ஒரு சந்ததியை – தலைமுறையை உருவாக்கி விட்டோம். போட்டிகளும், பொறாமைகளும் எங்களுக்குள் மலிந்து விட்டது. மன்னிப்பீராக. நாங்கள் சங்கீதம் 85:10,11 ன் படியும், யோவான் 1:17 ன் படியும் நடந்து பரிசுத்த ஆவிக்குள் வாழ்ந்து சபைகளை மலர்ச்சியடைய செய்ய பேரருள் புரிவீராக.