உங்கள் சந்தோஷத்தை ஒருவரும் எடுத்துப்போட முடியாது

உங்கள் சந்தோஷத்தை ஒருவரும் எடுத்துப்போட முடியாது.

I will see you again and your heart will rejoice, and your joy no one will take from you. (John 16:22)

John 4:14; Luke 10:42; Luke 16:25; Luke 19:26; Act 5:41; Act 16:25; Act 20:23,24; Romans 8:35-39; 1Thes3:7-9; 1Peter 4:13,14.

அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள் நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். (யோவான் 16:22)

யோவான் 4:14; லூக்கா 10:42; லூக்கா 16:25; லூக்கா 19:26; அப்போஸ்தலர் 5:41; அப்போஸ்தலர் 16:25; அப்போஸ்தலர் 20:23,24; ரோமர் 8:35-39; 1தெசலோனிக்கேயர் 3:7-9; 1பேதுரு 4:13,14.

நிலையான சந்தோஷம்:

ஆதியில் தேவனோடு கொண்டிருந்த ஐக்கியம் ஏதேனில் காணப்பட்டது. இந்த ஐக்கியத்தினால் தேவனும் ஆதி குடும்பமும் மகிழ்ச்சியாய் காணப்படனர். எப்பொழுது பிசாசு தேவனுக்கும் மனிதருக்கும் இடையில் வந்ததோ அன்றே இந்த சந்தோஷம் மனுகுலத்தை விட்டு எடுபட்டு போயிற்று. அதற்கு பரிகாரமாக மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலக சந்தோஷம் நதிபோல் பெருக்கெடுத்து ஒட ஆரம்பித்தது. மனுகுலம் இந்த மகிழ்ச்சியில் மூழ்கி போனதினால் தேவனுடைய மகிழ்ச்சியையும், பிரமாணத்தின் மகிழ்ச்சியையும், அவர் சமூகத்து பேரின்பத்தையும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

தேவன் தமது கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பின் சந்தோஷத்தைக் கொண்டு வர விரும்பினார். மனிதர்களோடு வாசம் செய்யும்படியாக தமது குமாரனை அனுப்பி பாவத்திலிருந்து மீட்டு சபையாக பரிணமிக்க வைத்து இரட்சண்யத்தின் சந்தோஷத்தைக் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாது தமது விலகுதலினால் உண்டாகும் பிரிவினையின் வேதனைகள் தாக்காதவண்ணம் தமது ஆவியை சபைக்குள் கொண்டுவந்து நிலைத்திருக்க செய்தார். அதனால்தான் தேவனுடைய இராஜ்யமானது புசிப்பும் குடிப்பும் அல்ல பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷம் எனப்பட்டது.

அவரால் கொடுக்கப்பட்டுள்ள நிலையான சந்தோஷம் மனித உள்ளங்களில் வைக்கப்படுள்ளதாயிருந்தாலும் சபையாக கூடிவந்து ஐக்கியத்தை வெளிப்படுத்தும்போதுதான் சந்தோசம் நதிபோல பாய்ந்து புறத்தியாரிடத்தில் வழிந்தோடும். சபை கூடிவருதலை வெறுக்கிறவர்களிடம் தெய்வ அன்பும், சந்தோஷமும் குடிகொண்டிருக்கவில்லையென்றே பொருள் படும். பிரிந்து வெளிப்படுவதல்ல. இணைந்து தேவ இராஜ்ஜியத்தைக் கட்டுவதே மேலானது. சபையாக கூடிவர மறுத்தாலும் தேவ இராஜ்யமாக சேர்க்கப்படுதலை ஒருவரும் தடுக்க முடியாது. இங்கே அவரின் சந்தோஷத்தைக் குலைத்துபோட யூதாஸுகள் எழும்பினாலும் அங்கே வைக்கப்பட்டுள்ள ஆனந்த சந்தோஷத்தை ஒருவரும் பறிக்க முடியாது.

நான் கிறிஸ்துவோடிருப்பவனென்றால் நான் கிறிஸ்தவனோடும் வாழ்ந்திருப்பேன்.

உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். ரோமர் 8:35-39.

ADD YOUR COMMENT

Powered By Indic IME