உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு
I have many things to say and to judge concerning you, (John 8:26)
Jn8:16; Jn5:42,43; Jn9:39-41; Jn12:47-50; Jn16:12; Heb5:11,12.
உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:26)
யோவான் 8:16; யோவான் 5:42,43; யோவான் 9:39-41; யோவான் 12:47-50; யோவான் 16:12; எபிரெயர் 5:11,12.
நிறைய பேச முடியும்:
யெகோவாவின் மக்களாகிய இஸ்ராயேல் ஜனம் யெகோவாவை நம்பிய அளவிற்கு அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவை நம்பவில்லை. இதனால் இஸ்ராயேலர் இயேசுவின்மேல் பகை உணர்வோடு காணப்பட்டனர் என்பதை அறிவோம். இந்நிலையில் தன்னை விசுவாசிக்காத, தன் வார்த்தைகளை ஏற்றுகொள்ளாத இஸ்ராயேலரை குறித்து தாராளமாய் பேசவும், அவர்களுடைய கிரியைகளினிமித்தம் நியாயந்தீர்க்கவும்
விருப்பமுள்ளவராயிருந்தும் அதை செய்யாது அவர்கள் மேல் மனதுருக்கத்தை காண்பித்தார்.
விசுவாசத்தின் பாதையில் செல்வோரை குறித்து பேசவேண்டியதில்லை. விசுவாசபாதையில் வராது பாவத்திலே வாழ்கிறவர்களை குறித்துதான் அதிகமாக பேசவேண்டியுள்ளது. பாவத்தை குறித்தும், தேவனுடைய கோபத்தை குறித்தும், பாவத்தின் தண்டனை குறித்தும், தேவனுடைய அன்பை குறித்தும், நீதியை குறித்தும், மனந்திரும்புதலை குறித்தும் ஏராளமாக பேச வேண்டியுள்ளது.
இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களில் அதிகமானவை ஜனங்கள் மனந்திரும்பி தேவனோடு ஒப்புரவாகுவதை குறித்ததாகவே காணப்பட்டது. அதற்காகவேதான் அவ்வளவு பாடுகளைபட்டார். மரணித்தார். இரத்தம் சிந்தினார்.
இன்றைக்கும் பரிசுத்த ஆவியானவர், தேவ மனிதர்கள் இவ்வுலக ஜனங்கள் மனந்திரும்ப வேண்டுமென்றே அதிகம் பிரசங்கிக்கிறார்கள். பில்லிகிரகாம் போன்றவர்கள் இந்த காரியத்தையே செய்கின்றனர்.
அவர் வருகை நெருங்கி வருவதினால் அவருக்கு நேராக ஜனங்கள் வழிநடத்தபட நாம் நமது பேச்சு, செயலகளை செப்பனிடுவோம்.
கர்த்தாவே நீர் உம் மக்களை தம் வழியில் நடத்த விரும்பினீர். உம் குமாரனை கொண்டும் அதையே செய்ய விரும்பினீர். ஆனால் அவர்கள் அவரையே கொன்றுபோட்டனர். இக்கால மக்களும் அவ்வாறே உள்ளனர். இரட்சியும்.