ஜீவன்

உங்களுக்கு ஜீவன் உண்டாக என்னிடத்தில் வர மனதில்லை.

you are not willing to come to Me that you may have life. (John 5:40)
Jn8:45,46; Jn12:37-41; Jn16:9; Jn20:25; Act8:28,39; Mat22:3; Mat23:37; Lk6:47; Lk14:18; Rev22:17; Ps81:11-16; Isa55:1-3.

அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. (யோவான் 5:40)

யோவான் 8:45,46; யோவான் 12:37-41; யோவான் 16:9; யோவான் 20:25; அப்போஸ்தலர் 8:28,39; மத்தேயு 22:3; மத்தேயு 23:37; லூக்கா 6:47; லூக்கா 14:18; வெளி 22:17; சங்கீதம் 81:11-16; ஏசாயா 55:1-3.

இயேசுவிடம் வாருங்கள்:

இயேசு கிறிஸ்து ‘வாருங்கள்’ என்று அழைக்கிறார்.

1. பாவிகளை மனந்திரும்ப அழைத்தார். மத்தேயு 9:13; 1தீமோத்தேயு 1:15.
2. வருத்தபட்டவர்கள் இளைப்பாறுதல் பெற அழைத்தார். மத்தேயு 11:28.
3. இருளில் இருப்போர் வெளிச்சம் பெற அழைத்தார். மத்தேயு 4:15; அப்போஸ்தலர் 26:18; 1பேதுரு 2:9.
4. மரணத்துக்கு நேராய் போகிறவர்கள் ஜீவன் பெற அழைத்தார். அப்போஸ்தலர் 26:18.
5. பிரிந்து கிடப்போர் ஐக்கியப்பட அழைத்தார். 1கொரிந்தியர் 1:9.
6. சமாதானமற்று இருந்தோர் சமாதானமடைய அழைத்தார். லூக்கா 10:5; யோவான் 20:21.
7. அசுத்தத்திலும் – தூய்மைகேட்டிலும் வாழ்ந்தோர் தூய்மையடைய அழைத்தார். 1 பேதுரு 1:15; 1 தெசலோனிக்கேயர் 4:7; 1கொரிந்தியர் 1:2.
8. கிரியைகளை நம்பி தோற்றுபோனோர் கிருபை பெறும்படியாய் அழைத்தார். எபிரெயர் 4:16; 2தீமோத்தேயு 1:9.
9. வெறுப்பு, பகை போன்றவைகளினால் பாதிக்கபட்டோர் அன்புபெற அழைத்தார். 1கொரிந்தியர் 13:13.
10. சாத்தானையும், மனிதனையும், உலகையும் நம்பி ஓடி சோர்ந்துபோனவர்கள் இயேசுவை பற்றிக்கொள்ள அழைத்தார். மத்தேயு 4:19,20; அப்போஸ்தலர் 26:18.
11. பெலனற்றுப் போனோர்கள் பெலன் அடையும்படி அழைத்தார். 1கொரிந்தியர் 1:24; 2கொரிந்தியர் 12:9.
12. தீமையை கர்ப்பம் தரித்து தீமையையே பெற்றவர்கள் நன்மையடையும்படி அழைத்தார். ஆதி50:20;ரோம12:9,21.
13. சொந்தம் இழந்து நிற்கதியானோர் சபை உறவுக்குள் வர அழைத்தார். எபிரெயர் 10:25; எபேசியர் 5:29.
14. நம்பிக்கையற்று போனவர்கள் பரலோக வாக்குதத்தத்தை பெற அழைத்தார். அப்போஸ்தலர் 2:39;எபி11:33.
15. அசுத்த ஆவிகளினால் நொறுக்கப்பட்டோர் பரிசுத்த ஆவியை பெற அழைத்தார். அப்போஸ்தலர் 1:5.
16. உன் ஜீவன் நிலையற்றுபோவதினால் நித்திய ஜீவன் பெற அழைத்தார். யோவான் 5:39.
17. எங்கும் விடுதலை கிடைக்காததினால் இரட்சிப்பு பெற அழைத்தார். 2தெசலோனிக்கேயர் 2:14.
18. நீங்கள் பிசாசின் பிள்ளைகளாய் இருந்து அடிமைபட்டுபோனதினால் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அழைத்தார். கலாத்தியர் 5:13.

நீ என்ன நிலையிலிருந்தாலும் உன்னையும் இயேசு அழைக்கிறார்.

கர்த்தாவே, நீர் உமது மகன் மூலம் தந்துள்ள நன்மைகள் எண்ணிக்கைக்கு அடங்கா. அவைகள் யாவையும்பெற நீர் எங்களை உம் குமாரனண்டை அழைத்தீர். அழைப்பை ஏற்ற நாங்கள் அந்த அழைப்புக்கு உண்மையுள்ளவர்களாய் நடந்துகொள்ள எங்களுக்கு உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME