உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான்

உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான்

Jesus,Did I not choose you,the twelve,and one of you is a devil? (John 6:70)
Jn6:64; Jn8:44; Jn13:2,18,21,27; Jn17:12;M t10:4; Mt27:3-8; Lk6:16; Act1:16-20; Act13:10; 1Tim3:11; Tit2:3; 1Jn3:8; Rev3:9,10; Ps41:9; Ps55:12-15; Ps109:4-20

உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான். (யோவான்6:70)
யோவான் 6:64; யோவான் 8:44; யோவான் 13:2,18,21,27; யோவான் 17:12; மத்தேயு 10:4; மத்தேயு 27:3-8; லூக்கா 6:16; அப்போஸ்தலர் 1:16-20; அப்போஸ்தலர் 13:10; 1 தீமோத்தேயு 3:11; தீத்து 2:3; 1யோவான் 3:8; வெளி 3:9,10; சங்கீதம் 41:9; சங்கீதம் 55:12-15; சங்கீதம் 109:4-20.

பிசாசின் ஆதிக்கம்:

பிசாசானவன் யார் என்று நாம் அறிந்திருக்க வேண்டும். பிசாசைக்குறித்து இயேசுவுக்கு நன்றாய் தெரியும்.
இயேசுவின் ஊழியகளத்தில் பிசாசானவன் 3 விதங்களில் அவருக்கு எதிராக செயல்பட்டான்.

  • நேரடி தாக்குதல் மூலம் எதிர்த்தான். தோல்வியடைந்து விலகிப்போனான். மத்தேயு 4:1-11.
  • பேதுருவின் மூலம் ஆலோசனை கொடுத்து வஞ்சிக்க முயன்று தோற்றான். மத்தேயு 16:22,23.
  • உலக ஆசைகொண்டிருந்த யூதாஸ் மூலம் சிநேகித்து, வஞ்சித்து சாத்தான் ஜெயித்தான்.ஆனாலும் அந்த தோல்வியில்தான் உலக மீட்பு உண்டானது. சாத்தான் தோற்றுக்கொண்டே போகிறான். முற்றிலும் அழிக்கப்படும் காலம் வந்துகொண்டிருக்கிறது.

பிசாசானவன் தேவனுடைய பிள்ளைகள் மூலமாக கிரியை செய்ய முனைகின்றான்.

  • உபத்திரவங்களை கொடுத்து பின்வாங்க வைக்கின்றான்.
  • உலக கவலைகளை கொடுத்து பின்வாங்க வைக்கின்றான்.
  • ஐசுவரியத்தின் மயக்கம், ஆடம்பர மோகம் கொடுத்து பின்வாங்க வைக்கின்றான்.
  • விவிலிய தெளிவு இல்லாதவர்களை பின்வாங்க வைக்கின்றான்.
  • வறுமை, தரித்திரம், வியாதிகள் மூலம் பின்வாங்க வைக்கின்றான்.
  • மாம்சீக காரியங்களின் இச்சையை கொடுத்து பின்வாங்க வைக்கின்றான்.
  • தவறான, முழுமனமாற்றம் இல்லாத ஊழியகாரர்கள், ஊழியகாரிகள் மூலம் பின்வாங்க வைக்கின்றான்.

தேவ இராஜ்ஜியத்தில் பிசாசானவன் நுழைந்துள்ளான் என்றால் சபைக்குள் பிசாசானவன் நுழைவதும், விசுவாசிகளுக்குள் பிசாசானவன் நுழைவதும், ஊழியகாரர்களுக்குள் பிசாசானவன் நுழைவதும் இயல்பே.

பிசாசானவனின் ஆழங்களை அறிந்துகொள்ளும் ஆவிக்குரிய கண்கள் நமக்குள் இல்லாவிட்டால் நமது உழைப்புகள், சம்பாத்தியங்கள், குடும்பங்கள், பிள்ளைகள் போன்றவற்றில் நுழைந்து பெரும் சேதத்தை உருவாக்குவான்.

விழித்திருப்போம்..
பசித்திருப்போம்..
தனித்திருப்போம்..
ஜெபித்திருப்போம்.

கர்த்தாவே, உம் அன்பினிமித்தம் குமாரனின் ஆவியை எங்களுக்கு தந்து சாத்தானின் ஆழங்களையும், கிரியைகளையும் காணும்படி மட்டுமல்ல அவைகளிலிருந்து விலகி நிற்கும்படியும் செய்தமைக்கு நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME