உங்களில் தேவ அன்பு இல்லையென்று அறிந்திருக்கிறேன்
But I know you,that you do not have the love of God in you. (John 5:42)
Mk7:6; Lk11:42; Lk16:15; Jn2:24,25; Jn6:64; Jn8:42,47,55; Jn15:23,24; Jn21:15-17; Ro8:7; 2Co10:18; Heb4:12,13; 2Pet1:5-8; 1Jn2:15; 1Jn3:17; 1Jn4:20; Rev2:23.
உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். (யோவான் 5:42)
மாற்கு 7:6; லூக்கா 11:42; லூக்கா 16:15; யோவான் 2:24,25; யோவான் 6:64; யோவான் 8:42,47,55; யோவான் 15:23,24; யோவான் 21:15-17; ரோமர் 8:7; 2கொரிந்தியர் 10:18; எபிரெயர் 4:12,13; 2 பேதுரு 1:5-8; 1 யோவான் 2:15; 1யோவான் 3:17; 1யோவான் 4:20; வெளி 2:23.
அன்பு இல்லா கிறிஸ்தவன்:
அன்பு என்றால் இயேசுதான். ஒருவனில் இயேசுவின் ஜீவன் இல்லையென்றால் பிதாவின் அன்பு இல்லை.
இயேசுவாகிய அன்பு சிலுவையின் வழியாகதான் மனிதனுக்குள் பாய ஊற்றெடுத்தது.
இந்த ஊற்றெடுத்த அன்பு பரிசுத்த ஆவியினால்தான் மனிதனுக்குள் பாய்கிறது.
பரிசுத்த ஆவியினால் ஊற்றப்பட்ட அன்பு இருக்குமானால், அந்த அன்போடுள்ள உறவை எவரும், எதுவும், எப்பொழுதும் பிரிக்கவியலாது.
அன்பு என்றால்:
1. அன்புள்ளவர் அன்பு செலுத்துகிறார்.
2. அன்புள்ளவர் பணிவிடை செய்ய முன் வருகிறார்.
3. அன்புள்ளவர் தன்னிடம் இருப்பதை கொடுக்க முன் வருகிறார்.
4. அன்புள்ளவர் தான் அன்பு காட்டுபவர் தவறும்போது கண்டித்துணர்த்துகிறார்.
5. அன்புள்ளவர் ஒரு நிலையில் தன்னை தியாகமாய் கொடுக்கவும் துணிகிறார்.
இந்த அன்பின் 5 இலக்கணமும் ஒரு கிறிஸ்தவனில் இல்லாதிருக்குமானால் அவனில் தேவ அன்பு இல்லை.
கிறிஸ்துவின் அன்பு….
– எப்பிதூமியா என்ற அன்பல்ல, எப்பிதூமியா இச்சை சார்ந்தது.
– ஈராஸ் என்ற அன்பல்ல, ஈராஸ் உடல் இச்சை சார்ந்தது.
– பிலாஸ் என்ற அன்பல்ல, பிலாஸ் நண்பீகத்துவ அன்பு.
– அகாப்பே என்ற அன்பு – ஏனெனில் அது தன்னை பலியாக கொடுத்த அன்பு, பரலோக அன்பு, பூமியில் பலிதமான அன்பு.
இந்த அகாப்பே என்ற தேவ அன்பு நம்மில் உண்டா?
கிறிஸ்தவம் என்பது அன்பின் மதம் – Religion of Love.
அன்பை பேசாமல்,
அன்பை காட்டாமல்,
அன்பை சுமந்து செல்லாமல்,
அன்பிலே வாழாமல்,
அன்பை கொடுக்காமல்,
அன்பிலே உருகாமல்
கிறிஸ்துவை நீ அறிவிக்க முடியாது.
நீ கிறிஸ்தவனாக வாழவும் முடியாது. கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்ளவும் முடியாது.
அன்பு இயேசுவல்ல, இயேசுவே அன்பு.
கர்த்தாவே, உமது அன்பை உமது மகன் மூலம் உலகிற்கு காண்பித்து உம் ஆவியின் மூலம் மனிதர்க்குள் ஊற்ற உம் ஊழியகாரர்களை கொண்டு சுமந்து செல்ல வைத்து எங்களை அன்பின் செடிகளாக மாற்றினீரே. உமக்கு நன்றி. நாங்களும் இந்த அன்பை சுமந்து செல்லும் நல்ல கழுதைகளாக இருக்க உம் ஆவியால் எங்களில் கிரியை செய்யும்.
( குறிப்பு இதேபோல் அன்றாடம் வரும் ஜெபத்தை நீங்கள் விரித்து ஜெபித்து கொள்ளுங்கள்.
ஆகையினால்தான் ‘ஆமென்’ என்று ஜெப முடிவில் போடவில்லை. நன்றி )