உங்களில் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
But whoever has this world’s goods, and sees his brother in need, and shuts up his heart from him, how does the love of God abide in him?(1John 3:17)
Luke 3:11; 2Corithians 8:9,14,15; 2Corithians 9:5-9; 1Timothy 6:17,18; Hebrew 13:16; Deu 15:7-11; Proverb 19:17; Isaiah 58:7-10.
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? (1 யோவான் 3:17)
லூக்கா 3:11; 2கொரிந்தியர் 8:9,141,5; 2கொரிந்தியர் 9:5-9; 1தீமோத்தேயு 6:17,18; எபிரெயர் 13:16; உபாகமம் 15:7-11; நீதிமொழிகள் 19:17; ஏசாயா 58:7-10.
ஆஸ்திக்காரனின் அன்பு:
பணம் பணத்தோடு சேரும், குணம் குணத்தோடு சேரும் என்பது முதுமொழி. ஆஸ்தியும் செல்வமும் பணமும் அளவுக்கு மீறும்போது அதுவே எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது. எந்த மத்தானாயினும், எந்த இனத்தானாயினும், எந்த ஜாதியானாயினும், எந்த மொழிகாரனாயினும் அவர்களுக்கெல்லாம் இதுவே நியமமாயிருக்கிறது. பொருள் பெருகுவதினால் அதை தின்கிறவர்களும் பெருகுகிறார்கள். அதிகமான பணபுழக்கம் அபரிதமான வளர்ச்சிக்கு அடையாளம் என்று நம்பப்படுகின்றது. பணம் சம்பந்தபட்டவைகளில் மனதை செலுத்தினவன் அவைகளை அடைவதற்காகவே தான் வாழ்கிறவனாகவும், அதை அடைவதே தமது கவுரவம் என்றும் நம்பிக்கொண்டு அவ்வழியிலே தன் மனதை செலுத்துகிறான்.
விவிலியத்தில் ஆஸ்திக்காரர்கள் சீமான்களாக அறியப்பட்டார்கள். அவைகளை தேவன் கொடுத்ததாகவும் நமபப்டுகின்றது. ஆனால் ஐசுவரியத்தையும், ஆஸ்தியையும் தேவன் எவருக்கெல்லாம் கொடுத்தாரோ அவர்களெல்லாம் சோதனைக்குட்படுத்தப்பட்டார்கள். இரண்டுவிதமான சோதனை அவர்களை புடமிட்டது. ஒன்று, மண் சார்ந்த – உலகு சார்ந்த ஐசுவரியத்தை விடவும் தேவனே தேவையானவர் என்ற மனநிலை கொண்டுள்ளார்களா என்று சோதித்தார். 2 வது, தேவனால் கொடுக்கப்பட்ட இந்த ஆஸ்திகளினால் எவ்வளவு எளியவர்கள் பிழைத்தார்கள் வாழ்ந்தார்கள் என்பதை அறிய விரும்பினார். அனேக தீர்க்கதரிசிகளின் புத்தகங்களில் இத்தகைய சிந்தனை இடம் பெற்றுள்ளதை அறிகின்றோம். இந்த பொருளாதார உச்ச நிலையே தேவனை மறப்பதற்கும், மற்றைய அனைத்து பாவங்களுக்கும் காரணமாயிருந்தது என்றுக் கூறினார்கள்.
இயேசுவின் காலத்திலும் அதற்கு பின்பும் இத்தகைய மனப்போங்கை பொருளாசை என்றுக் கூறி அதனை விக்கிரகராதனையாகவும், இச்சையாகவும் கருதி தேவனுடைய மனிதர்கள் இந்த கண்ணியில் அகப்படாதவாறு தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்றுக் கூறப்பட்டது. அதன்படியாகவே ஆதிசபையில் ஆஸ்தியுள்ளோரால் எளியவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் அறிவியல் பெருக்கமும், உலகவியலும் சபைகளுக்குள் நுழைந்தபோது ஆடம்பரமும், செல்வமோகமும் மேலிட்டது. சபைகளில் மறுமலர்ச்சி தோன்றியபின்பு பெந்தகோஸ்தே யுகம் உருவாகி சிலகாலங்கள் தாண்டி அதே ஐசுவரியத்தின் மயக்கம் சபைகளை மூடிக்கொள்ளலாயிற்று. அனேக பரிசுத்தவான்கள் ஜமீந்தார்களாக இருக்கிறார்கள். சபை சார்பு இயக்கங்கள் பல் ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள். ஆனால் ஏழை ஊழியகாரர்களும், ஏழை விசுவாசிகளும் அதிகமாக பெருகியுள்ளார்கள். ஐசுரியவான்களை சோதிக்கவே தேவன் சபைகளில் ஐசுரியவான்களை வைத்துள்ளார். தன்னிடம் வைத்துக் கொள்ளுவற்தற்கல்ல, பிறருக்கு கொடுப்பதற்காகவே ஐசுவரியம். கையையும் இருதயத்தையும் அடைத்துக் கொள்ளுகிறவனுக்கு பரலோக வாசலும் அடைக்கப்படும். மறவாதீர்..
கேள்வி. அன்பையும் ஐசுவரியத்தையும் இணைக்க என்ன செய்ய வேண்டும்?..
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே. இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று உற்சாகப்படுகிறதற்கும் ஒருவருஷமாய் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாயிருக்கும். ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக. ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும். மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன். எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,
சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக. 2கொரிந்தியர் 8:9-15.