ஈட்டியால் அவர் விலாவில் குத்தப்பட, இரத்தமும் தண்ணீரும் வந்தது.

ஈட்டியால் அவர் விலாவில் குத்தப்பட, இரத்தமும் தண்ணீரும் வந்தது.

soldiers pierced His side with a spear,immediately blood and water came out. (John 19:34)

John 13:8-10; Acts 22:16; 1Corinthians 6:11; Titus 2:14; Titus 3:5-7; 1Peter 3:21; 1John 1:6-9; 1 John 5:6,8; Revelation 1:5; Revelation 7:14; Hebrew 9:11-14; Hebrew 10:19-22.

ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. (யோவான் 19:34)

யோவான் 13:8-10; அப்போஸ்தலர் 22:16; 1கொரிந்தியர் 6:11; தீத்து 2:14; தீத்து 3:5-7; 1பேதுரு 3:21; 1யோவான் 1:6-9; 1யோவான் 5:6,8; வெளி 1:5; வெளி 7:14; எபிரெயர் 9:11-14; எபிரெயர் 10:19-22.

இரத்தமும் நீரும்: 
இயேசு கிறிஸ்து மரித்து போனார். அவர் மரித்து சில மணிதுளிகளில் போர்சேவகன் ஒருவன் ஈட்டியால் அவருடைய விலாவினில் குத்தினான். இதனால் இரத்தமும் நீரும் வந்தது. அவர் மரித்திருக்கின்றார் என்பதை உறுதி செய்யவோ, அல்லது மரித்த பின்பும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி காண்பிக்கவோ இவ்வாறு செய்திருக்கலாம். 

அவரின் விலாவினில் குத்தப்பட்டபோது இரத்தமும் நீரும் வந்ததை மருத்துவ முறைபடியாக உறுதிபடுத்திக் கொள்ள முடியும். இந்த செயல் அவர் மரித்து போனார் என்பதற்கான இன்னொரு ஆதாரமாகக் கருதப்படுகின்றது. 

இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் இருந்த கடைசி துளி இரத்தமும் பூமியில் சிந்தப்பட்டது. ஆவியாயிருந்த தேவன் இரத்தத்தை கொண்டு மாம்சமானார். இப்பொழுது எந்த மனுகுலத்துக்காக இரத்தத்தை கொண்டு மானுடனாராரோ அந்த மனுகுலத்தினால் அவரின் இரத்தம் சிந்தப்பட்டது.

இரத்தத்தை சிந்துதல் பாவமான செயல் என்பது நியாயப்பிரமாண விதியாகும். இந்த உரோம போர்சேவகர் அவரின் இரத்தத்தை சிந்தி பாவத்தை வாங்கிக் கட்டிக்கொண்டான். பச்சை இரத்தத்தை பரிமாறிக்கொண்டான். ஆனால் அதே இரத்தம் அவனை பாவத்திலிருந்து விடுதலை செய்கிறது என்பதை பின்னொரு நாளில் கண்டுக்கொண்டான். 

இரத்தம் சிந்துதல் கழுவப்படுதலுக்கானது.  பாவக்கறைகளை அகற்ற இரத்தத்தை கொண்டு கழுவும் முறையை நியாயபிரமாண விதிகளில்  தேவன் ஏற்படுத்தினார். பிராணிகளின் இரத்தமல்ல, தூயவரின் இரத்தமே பவமற கழுவதக்கது  என்பதை இது காண்பிக்கின்றது. இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்தமாக்குகிறது. 

இரத்தம் செத்த மனசாட்சியை தூய மனசாட்சியாக – தெளிந்த மனசாட்சியாக மாற்றுகிறது. இரட்சிக்கப்பட்டவனின் முதல் மீட்பு அவனுடைய மனசாட்சி விழிப்படைவதேயாகும். அவர் தமது இரத்தம் கொண்டு நம் மனசாட்சியை விழிப்படைய செய்துள்ளார். 

இரத்தம் நம் கறைபட்டுபோன சரீரங்களை தூய்மையாக்குகிறது. பாவத்தாலும், சாத்தானின் கிரியைகளினாலும் கறபட்டுபோன நம் உடலானது கழுவபட்டு தூய்மையாக்கப்பட்டு பிரதிஷ்டைக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறது. இனி இந்த சரீரத்தினால் பாவமான காரியங்களை செய்ய அனுமதியில்லை. இரத்தத்தினிமித்தம் நாம் கிரயத்துக்கு கொள்ளப்பட்டோம். 

இயேசு கீறிஸ்துவின் இரத்தத்தையும் நீரையும் சிந்தவைத்த மனுகுலம் அனேக நீதிமான்களின் இரத்தத்தையும் இந்த பூமியில் சிந்திக்கொண்டேயிருக்கின்றது. 

நீதி செய்கிறவர் நீதி வழங்க வரப்போகிறார். 
அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. வெளி 6:9-11.

பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார். அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள். அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள். ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர். வெளி 18:4-8.

இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். தன் வேசித்தனத்தினால் பூமியைக்கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள். மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். வெளி 19:1-3.

ADD YOUR COMMENT

Powered By Indic IME