இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.
இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைமட்டும் அவர்களுக்குச் சமீபமாயிருந்தவர்களும், கழுதைகள்மேலும் ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள் மேலும் மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், வற்றலான திராட்சப்பழங்கள், திராட்சரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகிய இவைகளை வேண்டியமட்டும் ஏற்றிக்கொண்டு வந்தார்கள், இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று. (1 நாளாகமம் 12:40)
1நாளாகமம் 12:38-40; 1இராஜாக்கள் 1:40; 2 இராஜாக்கள் 11:20; நீதிமொழிகள் 11:10; நீதிமொழிகள் 29:2; எரேமியா 23:5,6; லூக்கா 19:37,38; வெளி 19:5-7.
தாவீது இஸ்ராயேலிலே இராஜாவானதினிமித்தம் இஸ்ராயேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.
தேவன் இஸ்ராயேலிலே…
1. அவர்களுக்காய் யுத்தம் செய்து.
2. அவர்களிடையில் அற்புதங்கள் செய்து.
3. அவர்களுக்கு பிரசன்னமாகி.
4. அவர்களுக்கு பாதுகாவலராக இருந்து.
5. அவர்களுக்குரியதை கொடுத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.