இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. பின்னர் அறிந்தனர்.
His disciples did not understand these things at first; but when Jesus was glorified,they remembered. (John 12:16)
Lk9:45; Jn18:34; Jn24:25,45; Jn13:7; Jn16:17,18; Jn2:22; Jn14:26; Jn16:4; Lk24:6-9
இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவு கூர்ந்தார்கள். (யோவான் 12:16)
லூக்கா 9:45; லூக்கா 18:34; லூக்கா 24:25,45; யோவான் 13:7; யோவான் 16:17,18; யோவான் 2:22; யோவான் 14:26; யோவான் 16:4; லூக்கா 24:6-9,
அறியாமையின் காலம்:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையைக்குறித்தும் ப.ஏ-ல் விவரமாக எழுதப்பட்டிருந்தும் அவருடைய ஜனத்தாராகிய இஸ்ராயேலர் இயேசுவின் முதலாம் வருகையை அறியவுமில்லை, அதனால் அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அவர் செய்த அற்புதங்களும், அவரின் உபதேசங்களும் சிலருக்குள் மேசியாவை நினைவுபடுத்தியிருந்தாலும் பெரிய மனிதர்களுக்குள் பொறாமையையும், வெறுப்பையுமே உண்டாக்கியது.
இயேசுகிறிஸ்துவினால் தெரிந்துகொள்ளப்பட்ட சீஷர்கள் அவரோடிருந்தார்கள். அவரின் உபதேசங்களையும், அற்புதங்களையும் நன்றாக அறிந்தார்கள் என்றாலும் அவர்களுக்குள்ளும் முழுமையான அங்கிகரிப்பு உண்டாகவில்லை. சந்தேகங்களும், அவிசுவாசங்களும், பின்னிட்டு திரும்புதலும், காட்டிக்கொடுத்தலும் விலகி ஓடுதலும் தாராளமாய் காணப்பட்டது. அதைப்போலவே இயேசுவின் எருசலேம் பயணத்தையும், கழுதை சவாரியையும் ப.ஏ தீர்க்கதரிசனங்களையும் ஒப்பிட்டு பார்க்காது அறிவில்லாதிருந்தார்கள். அவர் மகிமைப்பட்ட பின்பு இவைகளின் பொருளை அறிந்து கொண்டார்கள். அதன் பின்பு அவர்கள் விசுவாசத்திலும், வைராக்கியத்திலும் நிலைத்து நின்றனர். மரணமோ, எதிர்ப்புகளோ புரட்டி போடவில்லை. முன் நிலையைக்காட்டிலும் பின்நிலை அதிக மேன்மையாயிருந்தது.
நாமும் இரட்சிக்கப்பட்ட துவக்கத்தில் நமக்குள் உண்டான நேச வைராக்கியத்தயும், விசுவாச வைராக்கியத்தையும் பாடுகளிலும் உபத்திரவங்களிலும் தக்க வைத்துக்கொள்ளவில்லை. இதனால் தான் உன் பேரில் எனக்கு குறை உண்டு. நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டு விட்டாய் என்று வெளி 2:4-ல் சொல்லப்பட்டுள்ளது. சுவிஷேசத்தின் வேராகிய விசுவாசம் இல்லாதினாலேதான் பின் வாங்கிப்போகுதலும், அவிசுவாசங்களும், முறுமுறுப்புகளுமுண்டாகின்றது. நாம் நம் விசுவாசத்தை இழந்தபின்பு நம்மை மறுபடியும் புதுப்பித்து விசுவாசத்தில் கட்டி எழுப்புவது இயலாத காரியம் என்பதை பவுல் கூறுகின்றார். எபிரெயர் 6:4-8.
நாம் அறிவில்லாதவர்களைப்போல் இல்லாது விசுவாசத்தில் உறுதியாய் நிற்போம்.
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். வெளி 2:10.