இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாதே.
let it not even be named among you, as is fitting for saints. (Eph5:3,4)
Ephesians 5:12,13; 1Corinthians 1:11; 1Corinthians5:1; Matthew 7:1-6; 1Corinthians 4:18-21; Exodus 23:13; Numbers 32:38; Deuteronomy 12:3; Joshua 23:7; Psalms 16:4; Jeremiah 10:11; Hosea 2:17; Zechariah 13:2.
மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. (எபேசியர் 5:3)
அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள். ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். (எபேசியர் 5:4),
எபேசியர் 5:12,13; 1கொரிந்தியர் 5:1; 1கொரிந்தியர் 1:11; மத்தேயு 7:1-6; 1கொரிந்தியர் 4:18-21; யாத்திராகமம் 23:13; எண்ணாகமம் 32:38; உபாகமம் 12:3; யோசுவா 23:7; சங்கீதம் 16:4; எரேமியா 10:11; ஓசியா 2:17; சகரியா 13:2.
சொல்லப்படக் கூடாதவை:
விவிலியம் இருவிதமான காரியங்களை தங்கள் நாவுகளினால் உச்சரிக்கலாகாது என்று அழுத்தமாகக் கூறுகின்றது. ஒன்று அந்நிய தெய்வங்களின் பேர்முதலாய் உச்சரிக்கலாகாது என்பதாகும். இன்னொன்று பாவசெயல்களின் பெயர்களை நாவினால் உச்சரிக்கலாகாது என்பதாகும். ஒன்று செயல் சார்ந்தவை, இன்னொன்று நாமங்கள் சார்ந்தவை. எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும். இத்தகைய பாவங்கள் மன்னிக்கப்படாது.
பாவங்களையும், பாவகிரியைகளையும் பட்டியலிடுவதற்கு தேவன் தமது ஊழியகாரர்களையோ, விசுவாசிகளையோ தெரிந்தெடுக்கவில்லை. மாறாக அவைகளை கடிந்து கொள்வதற்கும், விட்டு விலகுவதற்குமே கட்டளை பெற்றுள்ளோம்.
ஆசீர்வாதத்தை பிரயோகிக்கும் நாவில் சாபத்தையும், நன்மையை பேசும் நாவில் தீமையையும், நல்வார்த்தைகளை வசனிக்கும் நாவில் கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தலாகாது. ஏனெனில் ஒரே மரத்தில் நற்கனியும், துர்கனியும் உண்டாவதில்லை. ஒரே ஊற்றில் தித்திப்பும், கசப்பும் தோன்றுவதில்லை. அதைபோலவே தேவனுடைய ஆவியை பெற்றவர்கள் தேவர்களல்லாதவைகளின் பெயர்களை உச்சரிப்பதும், அசுத்த செயல்களை உச்சரிப்பதும் தகாது.
எபேசியர் 5:4 ல் வம்பு, புத்தியீனமான பேச்சு, பரியாசம் தகாதவைகள். ஸ்தோத்திரம் செய்தலே தகும். சங்கீதம் 1:1 ல் துன்மார்க்கனின் ஆலோசனையில் நடப்பதும், பாவிகளின் வழியில் நிற்பதும், பரியாசகாரர்களோடு உட்காருவதும் தகாதவைகள்.
தேவனை புகழும் வாயில் அந்நிய தெய்வங்களின் பெயரையுடையவர்களை பெயர்சொல்லிக்கூப்பிடுவது எவ்வளவு பாவம் என்பதையும், அதற்குரிய தண்டனை அயர்ந்திராது என்பதையும் அறிந்திருங்கள்.
நன்மையை பேசும் நாம் தீமையை பேசலாமா? ஆசீர்வாதத்தை விரும்பும் நாம் சாபத்தை பேசலாமா? பரிசுத்தம் நாடும் நாம் அசுத்தமானவைகளை பேசலாமா? தேவனை புகழும் நாம் தேவனல்லாதவைகளை இகழ்வதற்காகக்கூட பயன்படுத்தலாமா? உன்னை இரட்சித்த உன் தேவனின் வழியில் நட. உன்னை மற்றவர்கள் பின்பற்றட்டும். நீ உனக்கு முன்னோடும் பரிசுத்தவான்களை மட்டுமே பின்தொடர். உன் பின்னால் வருபவர்களை பின்னிட்டு பாராதே. உன் முன் செல்பவர்களை மட்டுமே கவனித்து முன்னேறு.
கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது. பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து; அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள். அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாய்க் கர்த்தருக்குமுன்பாக அவர்களைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தமாட்டார்களே. இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள். 2பேதுரு2:1-12.