இவன் குருடனாய் பிறந்தது யார் செய்த பாவம்

இவன் குருடனாய் பிறந்தது யார் செய்த பாவம்?

His disciples asked Him,saying,Rabbi,who sinned,this man or his parents,that he was born blind? (John 9:2)

Lev4:3; Lev19:22; Num5:7; Deu24:16; 1Kin8:36; 2Kin24:3; 2Chr6:27; Neh1:6; Jer17:3; Eze16:51; Lk13:2; Act28:1-6; 2Pet1:9.

அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். (யோவான் 9:2)

லேவியராகமம் 4:3; லேவியராகமம் 19:22; எண்ணாகமம் 5:7; உபாகமம் 24:16; 1 இராஜாக்கள் 8:36; 2 இராஜாக்கள் 24:3; 2நாளாகமம் 6:27; நெகேமியா 1:6; எரேமியா 17:3; எசேக்கியேல் 16:51; லூக்கா 13:2; அப்போஸ்தலர் 28:1-6; 2பேதுரு 1:9.

யார் செய்த பாவம்?
யூதசமய வழக்கப்படி, எல்லா குறைபாடுகளுக்கும் காரணம் பாவமே என்பதாகும். அதாவது, ஒன்றில் அவரவர் செய்த பாவத்தின் விளைவாகவோ, இல்லையெனில் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாகவோ இத்தகைய பாதிப்புகள் நேரிடலாம் என்பதாகும்.

இவன் குருடனாய் பிறக்க இவன் பாவம் செய்தானா என்ற முதல் கேள்வி சரியானதாக இராவிட்டாலும், ஆன்மாவானது ஒரு சரீரத்திலிருந்து இன்னொரு சரீரத்துக்கு கடந்து போவதின் அடிப்படையில் இவனின் ஆன்மா முன் இருந்த சரீரத்தில் செய்த பாவமே இப்பொழுது இவனை குருடனாக்கியது என்று நம்பி இக்கேள்வியை கேட்டனர் சீஷர்கள். ஆனால் விவிலியத்தின் பிரகாரம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆன்மா உண்டென்றும், அந்தந்த சரீரத்தின் முடிவில் அந்த ஆன்மா அதற்குரிய இடத்தில் போய் செர்ந்துவிடுமேயல்லாமல் வேறொரு சரீரத்தில் சென்று சேராது என்று கூறுகின்றது.

இவன் குருடனாய் பிறக்க இவன் பெற்றோர் செய்த பாவமாய் இருக்கலாம். பெற்றோர் செய்கின்ற பாவங்கள், அக்கிரமங்கள் பிள்ளைகளையும், சந்ததியையும் பாதிக்கும் என்பது உண்மையே. ஆனால் விவிலிய பிரகாரம் பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை பாதித்திருந்தாலும் அப்பிள்ளையானவன் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது பெற்றோரின் பாவம் அவனை ஒன்றும் செய்யாது. பாவம் செய்த பெற்றோர்களும் மனந்திரும்பி இயேசுவின் பிள்ளைகளாய் மாறினால் அந்த பாவத்தின் சுவடுகள் அவர்களின் சந்ததியை பாதிப்பதில்லை. இரட்சிக்கப்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. பாவங்களையும், சாபங்களையும் சேர்த்து வைக்க வேண்டாம். நல்ல புண்ணியங்களை சேர்த்து வைக்கவும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME