உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது

உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.

Because I have said these things to you, sorrow has filled your heart. (John 16:6)

Psalm 88:3,9; 1Kings 17:20; 1Chronicles 4:9; Ezra 9:5; Psalm 31:9; Psalm 119:92; Proverb 15:13; Ecclesiastes 7:3; Isaiah 14:3; 2Corinthians 2:7; Philippians 2:27; Hebrew 13:17.

ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. (யோவான் 16:6)

சங்கீதம் 88:3,9; 1இராஜாக்கள் 17:20; 1நாளாகமம் 4:9; எஸ்றா 9:5; சங்கீதம் 31:9; சங்கீதம் 119:92; நீதிமொழிகள் 15:13; பிரசங்கி 7:3; ஏசாயா 14:3; 2கொரிந்தியர் 2:7; பிலிப்பியர் 2:27; எபிரெயர் 13:17.

இருதயத் துக்கம்.

இயேசுகிறிஸ்து தமது தந்தையினிடம் செல்லவிருப்பதை பற்றி கூறுகின்றார். அதுமட்டுமல்ல, என்னிமித்தம் உங்களைப் பகைப்பார்கள் என்றும் கூறுகின்றார். இந்த இரு விஷயங்களும் சீஷர்களின் இருதயத்தில் வலியை உண்டு பண்ணினது. ஏற்கனவே கலங்கி போயும், இடறலடையும் சூழலிலும் இருந்த சீஷர்களுக்கு துக்கமும் பங்காக அமைந்து விட்டது.

பிரிவு என்பது பாவத்தினாலும் பாவத்தினால் உண்டான மரணத்தினாலும் உண்டாயிற்று என்பது உண்மைதான். ஆனால் நன்மைக்காகவும், மேன்மைக்காகவும், இரட்சிப்புக்காகவும் பிரிவு உண்டாக கூடுமானால் அதனை துக்கமாக பாவிப்பது நல்லதல்ல. அதனை சந்தோஷமாகவே கருத வேண்டும்.

எத்தகைய உறவானாலும் இவ்வுலக வாழ்க்கையில் நிரந்தரமல்ல, அது தற்காலிகமானதே. அது நிரந்தரமானதல்ல என்பதினால் நாம் ஏனோதானோ என்று வாழ முடியாது. நாம் துக்கத்தை சந்தோஷமாக மாற்றும்படியான போராட்டத்தில் நிற்கிறோம். துக்கமும் சந்தோஷமும் மாறிமாறி வருவதற்காக அல்ல, துக்கத்தை சந்தோஷமாக மாற்றும் போராட்டத்திலே தேவமக்களாகிய நாம் நிற்கிறோம். ஆனால் நமது சந்தோஷத்தை துக்கமாக மாற்றக்கூடிய முயற்சியில் பாவமும், பிசாசும் இருக்கின்றது என்பதை மறந்து போகலாகாது.

கலக்கம் நீங்க வாசஸ்தலத்தை வாக்களித்தவர் , துக்கம் நீங்க பரிசுத்த ஆவியை வாக்களிக்கிறார். இந்த பரிசுத்த ஆவி உங்களில் வந்து வாசம் பண்ணுவதினால் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று கூறுகின்றார். ஆனால் சீஷர்களில் இருந்த இந்த துக்கம் கெத்சமனேயில் ஜெபிப்பதற்கு பதில் தூங்கும்படி செய்தது. ( லூக்கா 22:45). அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றபின்புதான் துக்கம் அவர்களை ஜெயிக்க முடியவில்லை.

நாமும் தேவனுடைய ஆவியைப் பெற்றுகொண்டு வாழும்போது தான் சந்தோஷத்தில் நிறைய முடியும்.

இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம். மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும். பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும், சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும், கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும், அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம். 2கொரிந்தியர் 6:3-10.

ADD YOUR COMMENT

Powered By Indic IME