பெத்தானியாவில் இயேசுவுக்கு இராவிருந்து பண்ணினார்கள்.
There they made Him a supper; and Martha served, but Lazarus was one of those who sat at the table with Him. (John 12:2)
Gen18:8; Gen 19:9; Song4:16; Song5:1; Mt11:19; Mt26:6,7; Lk5:29; Lk7:34,31; Lk10:38-42; Lk12:37; Lk14:12; 22:27; Rev3:20.
அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள், மார்த்தாள் பணிவிடை செய்தாள், லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். (யோவான் 12:2)
ஆதியாகமம் 18:8; ஆதியாகமம் 19:9; உன்னதப்பாட்டு 4:16; உன்னதப்பாட்டு 5:1; மத்தேயு 11:19; மத்தேயு 26:6,7; லூக்கா 5:29; லூக்கா 7:34,37; லூக்கா 10:38-42; லூக்கா 12:37; லூக்கா 14:12; லூக்கா 22:27; வெளி 3:20
இராவிருந்தும் பணிவிடையும் பந்தியிருப்பும்.
இராவிருந்து. மாலை வேளையில் வழக்கமாக எடுக்கப்படும் உணவு என்பதினால் இராவிருந்து எனப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவுக்கு இந்த இராவிருந்து பரிமாறப்பட்டது. இது முறை சார்ந்த உணவு என்றாலும் இயேசுவின் கூட்டத்தாருக்காக விஷேசமாக ஒழுங்கு செய்யப்பட்ட உணவாயிருக்கலாம். லாசருவை உயிரோடே எழுப்பியதன் நிமித்தம் இயேசுவையும் அவரது கூட்டத்தாரையும் கவுரவிக்கும் படியாக பெத்தானியாவாசிகளோ, அல்லது லாசருவின் குடும்பத்தாரோ ஒழுங்கு செய்திருக்க கூடும்.
இந்த இராவிருந்தில் மார்த்தாள் பணிவிடை செய்தாள். லாசரு இயேசுவுடன் பந்தியமர்ந்தான். இந்த நிகழ்வை கவனிக்கும் போது லாசருவின் சகோதரிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட இராவிருந்து எனலாம்.
இதோபோலொரு இராவிருந்தை இயேசுவின் ஆலோசனையின் பேரில் சீஷர்கள் ஆயத்தம் செய்தனர். அதில் இயேசுவோடு 12 பேரும் பந்தியிருந்தார்கள். அங்கே இயேசு அவர்களுக்கு பணிவிடை செய்தார் என்றுள்ளது. இதனை இறுதி இராவிருந்து என்பர் (யோவான் 13)
இயேசு கிறிஸ்து ஆயக்காரரோடும் பாவிகளோடும் விருந்துண்கிறவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். போஜனம் பண்ணுகிறவராய் இருந்ததினாலே போஜன பிரியனும், மதுபான பிரியனும் என்றும் குற்றம் சாட்டினதுண்டு. மன சுத்தியோடு அவருக்கு செய்யப்பட்ட விருந்தையும், பணிவிடைகளையும் திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொண்டார்.
நாம் அவருக்கு செய்யும் விருந்து உபசரணைகளும், பணிவிடைகளும் அவர் நமக்கு திரும்ப செய்யும்படி அவரை செயல்பட வைக்கிறது. (யோவான் 14:23, வெளி 3:20).
அவருடைய இராஜ்யத்தில் நமக்கு விருந்து செய்யப்படும். எனவே நாம் அவருக்கு செய்வதை செம்மையாக செய்வோம். அவர் விரும்பும்படி செய்வோம். எளியவர்க்கும் இல்லாதோருக்கும் செய்வதையே எனக்கு செய்கிறீர்கள் என்று இயேசு கூறியிருப்பது இதுவே. (மத்தேயு 25:45). தேவனுடைய சபையில் இருக்கும் எளியோர்க்கு உதவி செய்ய மனமற்று, எளிய சகோதர்களுக்கு உதவி செய்ய மனமற்று பிறர் காணும்படி செய்யப்படும் எந்த தான தர்மங்களும் தேவனுடைய கண்களுக்கு தெரிவதில்லை. அவரால் நினைவு கூரப்படுவதுமில்லை. எளியோர்க்கு விருந்து வைத்து பணிவிடை செய். நீ தேவராஜ்ஜியத்தில் பந்தியமர்வாய்.
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எபேசியர் 2:10.