இரவில் நடப்பவனிடம் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான்

இரவில் நடப்பவனிடம் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான்.

But if one walks in the night, he stumbles, because the light is not in him. (John 11:10)

Jn9:4; 1Jn1:6; 1Jn2:9-13; 1Jn3:12; Job7:1; Ps27:2; Pr4:12,18,19; Ecc2:14; Isa59:10; Jer13:16; Jer20:11.

ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார். (யோவான் 11:10)

யோவான் 9:4; 1யோவான் 1:6; 1யோவான் 2:9-13; 1யோவான் 3:12; யோபு7:1; சங்கீதம் 27:2; நீதிமொழிகள் 4:12,18,19; பிரசங்கி 2:14; ஏசாயா 59:10; எரேமியா 13:16; எரேமியா 20:11.

வெளிச்சம் இல்லாமை இடறுதலின் பாதை.
வெளிச்சம் உண்டு பண்ணாத காலத்தில் அண்டவெளியில் இருந்த கார்மேகம் போன்ற நிலமையை இருள் என்று கூறுகின்றது விவிலியம். இயற்கையில் வெளிச்சம் இல்லாத நிலை இருள் எனப்படுகிறது. இருளை இரவு என்று விவிலியம் அழைக்கின்றது. ஆதியில் தேவன் வானம் பூமியை படைத்த போது காணப்பட்ட நிலையே இருள். இருள் என்பது ஆழம் அறிய இயலா நிலை. முகம் அறிய இயலா நிலை. பூமி தண்ணீருக்குள் இருந்தது. தண்ணீரின் மேல் தேவ ஆவியானவர் அசைவாடிக்கொண்டிருந்தார்.

ஆழத்தின்மேல் இருள் இருந்தாலும் தண்ணீரின் மேல் தேவ ஆவியானவர் அசைவாடிக்கொண்டிருந்தார். இயற்கையில் வெளிச்சத்தை உண்டு பண்ணி இருளையும் வெளிச்சத்தையும் தேவன் பிரித்தார். இந்த இருள் நிறைந்த காலமே இரவின் காலம்.

இரவானது பணியில்லா அமைதியின் காலம். நித்திரையின் காலம், குளிர் நிலவின் காலம். வானத்தின் அழகை அனுபவிக்கும் காலம். தூர இருக்கும் நட்சத்திரங்களை காணும் அனுபவம் நிறைந்த காலம். ஆனால் பணி செய்ய இயலாது, உதவி செய்ய இயலாத , அவரவர் தங்களுக்குள் தாங்களே அனுபவிக்கும் காலமாகிறது.

இரவின் காலத்தை தேவனுடைய மக்கள் நன்றாய் அனுபவிக்கவே தேவன் இரவையும் ஏற்படுத்தினார். பகலின் உஷ்ணத்தினூடே பணியாற்றும் தேவ மக்கள் இரவின் குளிர்ச்சியான வேளையை தூக்கத்துக்காக பயன்படுத்திதானாக வேண்டும். பகல் நேரமே எனக்கு பத்தலை என்று சொல்லிக்கொண்டு இரவையும் பகல் போலாக்கி பணிசெய்கின்ற தேவ ஜனங்கள் வியாதியிலும், வருத்தங்களிலும், வேதனைகளிலும் சிக்கி தவிக்கின்றார்கள்.

இரவில் நடப்பதும், இரவில் பணி செய்வதும், இரவில் ( அடிக்கடி) கண்விழிப்புடன் ஜெபம் செய்வதும் உடலின் உறுதி கெட்டு, பெலன் இழந்து, உன்னத ஆசீர்வாதமாகிய நீண்ட ஆயுளை இழந்துப்போகிறதற்கு காரணமாகின்றது.

பகலில் ஜெப நேரங்களை ஏற்படுத்தாமல் ஊர் சுற்றிக்கொண்டு இரவில் கண்விழிப்பு ஜெபம் செய்கிற தேவ மனிதர்களே உடலை கெடுக்காதீர்கள். உடல் பரிசுத்த ஆவியின் ஆலயமாயிருக்கிறது.
Early to bed, Early to raise.

பகலை இரவாக்குகிறவர்களும், இரவை பகலாக்குகிறவர்களும் சரீரத்தின் கடிகார அமைப்பை மாற்றி அமைத்து இயற்கையோடு ஒன்றித்துபோக இயலாதபடிக்கு இடறுகின்றார்கள்.
பகலின் உஷ்ணம் இரவின் குளிர்ச்சியை மனிதன் உடல் அனுபவிக்க வேண்டும்.

இரவை நன்மைக்காக பயன்படுத்த சொன்ன தேவனின் நாமத்திற்கு எதிராக இரவை சாத்தான் பயன்படுத்த ஆரம்பித்து விட்டான். எனவே இரவில் ஒளிரும் விடி வெள்ளி தோன்றியுள்ளார்.

கர்த்தாவே இரவின் நன்மைகளை நாங்கள் அனுபவித்து உமக்கு சாட்சியாக வாழ உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME