இயேசுவே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங் கொடுக்கிறவர்…
நானும் இவரை அறியாதிருந்தேன்: ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ,அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். (யோவான் 1:33)
யோவான் 3:5,34; மத்தேயு 3;11,14; மாற்கு 1:8; லூக்கா 3:16; யோவான் 20:21,22; அப்போஸ்தலர் 1:5-8; அப்போஸ்தலர் 10:44-48; அப்போஸ்தலர் 11:15-18; அப்போஸ்தலர் 19:2-6; 1கொரிந்தியர் 12:13; தீத்து 3:5,6; எபிரெயர் 6:4-6
Baptiso – to dip, to immerse, to submerge. – to cleanse by dipping. – to overwhelm.
ஆவியின் ஞானஸ்நானம் என்பதை
1. ஆவியினால் உள்ளான மனிதன் கழுவபடுதலை குறிக்கும். 1கொரிந்தியர் 6:11
2. கிறிஸ்துவின் சாயலாக பரிணமிப்பதை குறிக்கும். புது சிருஷ்டி. தேவ சாயல் பளிச்சிடும். கலாத்தியர் 3:27
3. பாவத்தின் மரண வாசனையிலிருந்து உயிர்ப்பின் ஜீவ வாசனையை அடைவது ப.ஆவியின் ஞானஸ்நானம்.
4. ஆவியின் கட்டுபாட்டுக்குள் வருதலை குறிக்கும். அப்போஸ்தலர் 20:22. – Live for duty. – Do for duty. – Die for duty.
5. நமது ஆவியில் ப.ஆவியானவ்ர் வந்து பரிணமிப்பதை குறிக்கும். அப்போஸ்தலர் 9:17
6. ஆவியினால் நடத்தபடுவதை குறிக்கும். ரோமர் 8:14
7. தேவனுடைய Realm க்குள் இருப்பதை குறிக்கும். எபேசியர் 4:30
8. மனசாட்சியின் கண்கள் திறக்கபட்டதை குறிக்கும். 1பேதுரு 3:21
9. அப்போஸ்தலர், மற்றுமுள்ள தேவ மனிதர்கள் எவரும் ப.ஆவியின் ஞானஸ்நானம் கொடுக்க முடியாது.. ஆனால் அதற்காக ஜெபிக்கலாம், காத்திருக்கலாம். கொடுக்கிறவர் கிறிஸ்துவே. அப்போஸ்தலர் 1:4,5
10. கைகளை வைத்தல் என்பது அபிஷேகம் பண்ணுவதற்கு அடையாளம். ப.ஆவியை கொடுப்பதற்கான அடையாளம் அல்ல… ஆனாலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் இது சாத்தியமே. எண்ணாகமம் 27:18; 2தீமோத்தேயு 1:6; அப்போஸ்தலர் 8;16,17
ஆனாலும் அபிஷேகம் பண்ணுதலும், ஞானஸ்நானமும் ஒன்றல்ல.