இயேசு திபேரியாவில் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.
Jesus showed Himself again to the disciples at the Sea of Tiberias. (John 21:1)
John 1:18; John 2:11; John 17:6; Acts 2:22; Romans 16:25; 1Corinthians 2:10; 1Corinthians 4:5; Galathians 1:12; Titus 1:4; Revelation 1:1.
இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது. (யோவான் 21:1)
யோவான் 1:18; யோவான் 2:11; யோவான் 17:6; அப்போஸ்தலர் 2:22; ரோமர் 16:25; 1கொரிந்தியர் 2:10; 1கொரிந்தியர் 4:5; கலாத்தியர் 1:12; தீதது் 1:4; வெளி 1:1.
பெனிரோ.
மறைவாயும், அறியாமலும், புரியாமலும் இருந்ததை வார்த்தையினாலோ, கிரியைகளினாலோ, காட்சியினாலோ காணும்படியாகவும், தெரியும்படியாகவும், அறியும்படியாகவும் செய்தலே பெனிரோ அல்லது வெளிப்படுத்தல். அப்போஸ்தலர் 1:3 ல் இயேசுகிறிஸ்து தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பித்தார் என்று சொல்லப்பட்டுள்ளதே இவ்வசனத்தின் பொருளாகும். மனிதனாக பிறந்த இயேசு மானுடவியலின்படி மரணத்தை தழுவினார்.
மரணத்தை தழுவினவர் மறுபடியும் உயிரோடு எழும்பினார். உயிரோடு எழும்பியதை வெறும் காட்சியாகவோ, தரிசனமாகவோ, தோற்றமாகவோ கருதகூடாது என்ற முறையில் இயேசு கிறிஸ்து மரணத்துக்கு முன்பு எப்படியிருந்தாரோ அப்படியே மரித்து உயிர்த்த பின்பும் காணப்பட்டார். மரணத்துக்கு முன்பு இரத்தத்தை உயிராக கொண்டவர் மரித்து உயிர்த்த பின்பு ஆவியை உயிராகக் கொண்டார்.
மாம்சத்திலே கொலையுண்டவர் ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு அதே சரீரத்தோடே காட்சி கொடுத்தது உண்மையாயின் பவுலுக்கு இயேசு கிறிஸ்து கொடுத்த காட்சியும் உண்மையானதேயாகும். 1கொரிந்தியர் 15:1-8. இவைகள் உண்மையென்றால் ஆதிசபை சரித்திரகாலத்திலிருந்து இது நாள் வரையிலும் கர்த்தராகிய இயேசு அதே சரீரத்தோடு காட்சி கொடுத்தார் என்று சொல்லப்பட்டுள்ள எல்லா சரித்திர சம்பவங்களும் உண்மையேயாகும். ஆம், இயேசு கிறிஸ்து பூமியில் இராஜாவாக அரசாளுவது வரையிலும் அவரின் இந்த காட்சி, வெளிப்பாடு உண்மையானதாகவே கருதப்படும். ஆவிக்கு சரீரமில்லை என்பது உண்மைதான். ஆனால் இயேசுவுக்கு மகிமைபடுத்தப்பட்ட சரீரம் உண்டு. இதனையே ஆதிசபையார் புரிந்துக் கொண்டிருந்தனர்.
இன்றும் இயேசு வெளிபடுகின்றார். வெறும் ஆவியாக மட்டுமல்ல சரீரமாகவும் வெளிபடுகின்றார். நாம் அவரோடுள்ள உறவில் உண்மையுள்ளவர்களாக இருப்போமெனில் அவரை அந்நிய கண்களினால் அல்ல, சொந்த கண்களினாலே தரிசிக்க முடியும். நாம் தரிசித்து வாழ்கிறவர்களல்ல, தரிசிக்க வாழ்கிறவர்கள். சிலர் தரிசித்தும் வாழ்கிறார்கள், சிலர் தரிசிக்கவும் போயுள்ளார்கள். நாமோ நம்முடைய இரட்சகராகிய இயேசு வருவதற்கு அவரை காண்பதற்கு, தரிசிப்பதற்கு காத்திருக்கிறோம்.
வெளிப்பாடுகள் நாம் அவரில் விசுவாசம் வைப்பதற்கும், பிறரை அவரில் விசுவாசம் வைப்பதற்கும் தூண்டுகின்றது. சீஷர்கள் அவரை உண்மையாகவே தரிசித்தார்கள். அனேகர் அவரை தரிசிக்கும்படிக்கு ஆயத்தம் செய்தார்கள். நாம் தரிசிக்காமலிருந்தாலும் அவரை தரிசிக்க ஆயத்தபடுகிறோமென்றால் நம்மோடுகூட பெரும் கூட்டத்தையும் ஆயத்தமாக்குவோமாக. பரலோகில் அவரை தரிசிக்க முன்னேறும் நாம் தோல்விகளிலும், வேதனைகளிலும், இழப்புகளிலும் மருளாது முன்னேறுவோமாக.
தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன். அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அப்போஸ்தலர். 1: