இயேசு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து

இயேசு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து

Jesus spoke these words, lifted up His eyes to heaven. (John 17:1)

John 11:41; John 6:5; Luke 18:13; Mark 8:24; Job 11:15; Genesis 13:14; Psalm 121:1,2; Psalm 123:1; Psalm 134:2; Psalm 141:2.

இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: (யோவான் 17:1)

யோவான் 11:41; யோவான் 6:5; லூக்கா 18:13; மாற்கு 8:24; யோபு 11:15; ஆதியாகமம் 13:14; சங்கீதம் 121:1,2; சங்கீதம் 123:1; சங்கீதம் 134:2; சங்கீதம் 141:2.

ஏறெடுத்த இயேசு:

ஏறெடுத்தல் என்பது உயர நோக்கிப் பார்த்தல் என்றும், பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தி கண்களை உயர்த்தி பார்க்குதல் என்றும் அறியப்படுகின்றது. இயேசு கிறிஸ்து பிதாவினிடத்திலிருந்து வந்ததவராகையினால் பிதாவை உற்றுப்பார்ப்பதையும், நோக்கிப் பார்ப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். உன்னதத்திலிருந்து வந்தவர் உன்னதத்தை ஏறிட்டுப்பார்க்கிறவராயிருந்தார்.

மனிதர்களில் நான்கு வகையினர் உண்டு. எவரையும் பார்க்க விரும்பாதவர்கள், கீழ்நோக்கி பார்த்தே வாழ்பவர்கள், பக்கவாட்டில் பிறரை நோக்கி பார்த்தே பழகியவர்கள், எல்லாவற்றிற்கும் கடவுளையே பார்க்க வானத்துக்கு ஏறிட்டு பார்க்கிறவர்கள். நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேதான் நமது சிந்தனை செல்லும். நமது இருதயத்தில் எது நிறைந்துள்ளதோ அதுவாகவே மாற விரும்புகிறோம். இயேசுகிறிஸ்து பிதாவை நம்பியிருந்தார். எல்லாவற்றிற்கும் நன்மையிலும், தீமையிலும் பிதாவையே நம்பியிருந்தார். ஆகையினால்தான் எல்லாவற்றிற்காகவும் பரலோக தேவனை நாடினார்.

யோவான் 17 ஆம் அதிகாரத்தில் காணப்படுகிற ஜெபமானது மேய்ப்பனின் ஜெபம், மன்றாட்டு ஜெபம், இறுதி ஜெபம், தந்தையிடம் மகன் ஏறெடுக்கும் ஜெபம் என்று பலவாறாக கூறுகின்றனர். அடிக்கடி பிதாவை நோக்கிப்பார்த்து பழகியவருக்கு இந்த ஜெபத்தை ஏறெடுப்பது கடினமானதாக தெரியவில்லை. தந்தையிடம் வெளிப்படையாக பேசுகிறார். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட செயல்களை குறித்தே பேசுகிறார். கர்த்தராகிய இயேசுவின் இந்த ஏறெடுத்தலின் ஜெபத்தில் ஒருசில உண்மைகள் மறைந்துள்ளன. அந்த உண்மைகள் தேவனுடைய பணியை செய்யும் ஒவ்வொருவருக்கும் அவசியமானது.

தேவனை ஏறிட்டு பார்க்கும் தைரியம்.

தமது கிரியைகள் யாவையும்குறித்து ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுதல்.

தனது பணிகளை நிறைவு செய்தேன் என்ற திருப்தி.

ஒன்றித்து இருத்தலே, ஒன்றித்து வாழ்தலே, ஒன்றித்து பணி செய்தலே முக்கியமானது.

எல்லாவற்றிலும் தூய்மையை பேணிகாத்தல்.

இந்த 5 காரியங்களிலும் எவ்வளவு வெளிப்படைதன்மையோடு நடந்து கொண்டாரோ அவ்வளவாய் அவருடைய சீஷர்களும் பின்னாட்களில் நடந்து கொண்டனர். ஆனால் இக்கால கிறிஸ்தவ சமூகத்தில் தேவனுடைய ஊழியர்களிடம் இத்தகைய வெளிப்படை தன்மை காணப்படுகிறதா? விசுவாசிகளிடையில் ஒளிவு மறைவில்லா வெளிப்படைதன்மை காணப்படுகிறதா?.

ஏறெடுத்து செய்யும் ஜெபத்தில் வெளிப்படைதன்மை இல்லையெனில் பயன் ஏதுமில்லை. ஜெபம் என்பது தன்னை தேவனுக்கு முன்பாக திறந்த மனதோடு ஒப்படைத்தலேயாகும். விருப்பு, வெறுப்புக்கு இடமில்லை.

ஏறெடுத்து பழகு; வீறிட்டு எழும்புவாய்.

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். சங்கீதம் 121.

ADD YOUR COMMENT

Powered By Indic IME