யூதேயா

இயேசு சீஷர்களுடன் யூதேயாவில் சஞ்சரித்து ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.

Jesus and His disciples came,and there He remained with them and baptised. (John 3:22)
Jn3:26; jn4:1-3; jn7:3-5; Mk1:14,15; Act2:37-41; act4:1-4; act8:14-17,36-39; 1Cor1:12-18; 1Sam26:11,12.

இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்: அங்கே அவர் அவாகளோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார். (யோவான் 3:22)

யோவான் 3:26; யோவான் 4:1-3; யோவான் 7:3-5; மாற்கு 1:14,15; அப்போஸ்தலர் 2:37-41; அப்போஸ்தலர் 4:1-4; அப்போஸ்தலர் 8:14-17,36-39; 1கொரிந்தியர் 1:12-18; 1 சாமுவேல் 26:11,12.

ஞானஸ்நானம் குறித்து யோவான் 1:29 ன் குறிப்புகள் காண்க.

இங்கே இயேசு கொடுத்த ஞானஸ்நானம் குறித்து தியானிக்கலாம்.

இயேசுகிறிஸ்து எடுத்துகொண்ட ஞானஸ்நானம் அல்ல, அவர் பிறருக்கு கொடுத்த திருமுழுக்கு குறித்ததாகும்.

3:22 ல் இயேசுகிறிஸ்து திருமுழுக்கு கொடுத்து வந்தார். ஆனால் 4:3 ல் இயேசுதாமே திருமுழுக்கு கொடுக்கவில்லை, சீஷர்கள் கொடுத்தார்கள் என்றுள்ளது.

இதன் விளக்கம் வருமாறு…

1. யோவான் 3:22 ல் யூதேயாவில் இயேசு திருமுழுக்கு கொடுத்தார். யோவான் 4:2 லோ இயேசு கலிலேயாவுக்கு போனார். அங்கே சீஷர்கள் திருமுழுக்கு கொடுத்தனர்.

2. இயேசுகிறிஸ்துவின் கட்டளையின் பேரில் சீஷர்கள் திருமுழுக்கு கொடுத்தனர்.

3. இயேசுவும் கொடுத்தார், சீஷர்களும் கொடுத்தனர் என்கின்றனர் சிலர்.

இயேசுவை ஏற்றுகொண்டு இயேசுவை போல வாழ்கிறவர்களே திருமுழுக்கு கொடுக்க தகுதியானவர்கள்.

தங்களிஷ்டம் போல் திருமுழுக்கு கொடுப்பது அவ்வளவு தகுதியாயிருக்காது.

இயேசு பிதாவினால் கட்டளை பெற்று திருமுழுக்கு கொடுத்தார்.

நாமும் பரிசுத்த ஆவியால் கட்டளை பெற்று கிறிஸ்துவைபோல மாறி கிறிஸ்துவாக- கிறிஸ்துவின் பிரதிநிதியாக நின்று கிறிஸ்துவின் பெயரில் , பிதா குமாரன் பரிசுத்த ஆவி பெயரில் திருமுழுக்கு கொடுக்க அழைக்கபட்டுள்ளோம்.

திருமுழுக்கு கொடுக்க ஒரு ஒழுங்கை சபை தீர்மானித்து செயல்படுத்தியிருக்குமானால் அதை மறுக்கலாகாது – பாரம்பரியம் என்று ஒதுக்கி தள்ளவும் இயலாது.

கர்த்தாவே, நாங்கள் உம்மால் திருமுழுக்காட்டபட்டு உம்மோடு இணைந்து கொண்டோம். இப்பொழுது உம் சார்பாக நின்று உம் பெயரில் திருமுழுக்கு கொடுக்க எங்களை ஆசாரியர்களாக்கியுள்ளீர். எனவே நாங்கள் உம் ஊழியகாரர்களின் வழி நின்று செயல்பட எங்களுக்கு உதவி செய்தருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME