இயேசு குறிப்பால் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறதக்க.
saying of Jesus might be fulfilled which He spoke, signifying by what death He would die. (John 18:32)
John 3:14; John 10:31,33; John 12:32,33; Matthew 20:19; Matthew 26:2; Luke 18:32,33; Luke 24:7,8; Deut 21:23; Psalm 22:16; Galathians 3:13.
தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள். (யோவான் 18:32)
யோவான் 3:14; யோவான் 10:31,33; யோவான் 12:32,33; மத்தேயு 20:19; மத்தேயு 26:2; லூக்கா 18:32,33; லூக்கா 24:7,8; உபாகமம் 21:23; சங்கீதம் 22:16; கலாத்தியர் 3:13.
மரண வாக்கு:
மரணம் என்பது பாவத்தின் விளைவு. சரீர மரணம், ஆத்தும மரணம் உண்டு. சரீர மரணம் என்பது உடலிலிருந்து உயிர் பிரிவது. ஆத்தும மரணம் என்பது படைத்தவரிடமிருந்து உயிர் பிரிதல். இங்கு சரீர மரணம் குறித்தே இயேசு கிறிஸ்து பேசுகிறார்.
விவிலியத்தின் ஆதி தந்தையர்களெல்லாம் தங்கள் மரணத்தை முன்கூட்டியே அறிந்திருக்கவில்லையென்றாலும் முடிவு நேரத்தை முடிவு நாட்களில் அறிந்து வெற்றியாய் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டனர்.
சில தேவ , மனிதர்களின் மரணம் தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கப்பட்டது. அதன்படியாகவே அவர்கள் மரண நித்திரையடைந்தார்கள்.
கர்த்தராகிய இயேசுவின் மரணம் குறித்த தீர்க்கதரிசனங்கள் உலகம் உண்டான காலத்திலேயே குறிக்கப்பட்டதாகும். குறிக்கப்பட்ட அந்த மரணவாக்குகளினூடே இயேசுகிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசிகளும், பரிசுத்தவான்களும் உரைத்தார்கள். அந்த மரணவாக்கு என்ற நீரோட்டம் மனிதர்களால் – இஸ்ராயேலர்களால் புரிந்துக் கொள்ளப்பட்டதோ இல்லையோ தேவனுடைய ஊழியக்காரர்கள் அறிந்து எழுதிவைத்து சென்றார்கள்.
கர்த்தராகிய இயேசுவும் கூட தனக்கு குறிக்கப்பட்டிருந்த மரணவாக்கின் பாதையில் செம்மையாக ஓடுவதில் கவனமாயிருந்தார். அந்த பாதையை விட்டு விலகச் செய்யும் முயற்சிகள் பல நேரங்களில் நடந்திருந்தும் அவைகள் எல்லாவற்றிலும் சற்றேனும் இடறாமல் சிலுவை நோக்கி பயணித்தார். இந்த சிலுவை பயணத்தில் மரணவாக்கின் நீரோட்டத்தில் இயேசுவோடுகூட பயணிக்க மறுத்த அனேக சீஷர்கள் பின்வாங்கிப்போனார்கள் என்று யோவான் 6 கூறுகின்றது.
தேவன் அவருக்கு கடினமான பாதையை வைத்திருந்தும் கர்த்தராகிய இயேசு தமது தந்தையோடுகூட பயணிக்க மறுத்ததேயில்லை. அன்பான தேவனுடைய மக்களே தேவன் நமக்கு நலமான பாதையையே தரவேண்டும் என்று நான் வாஞ்சிக்கின்றேன். ஆனால் அவர் கடினமான பாதையையும் நம்முன் வைக்கிறார் என்பதை உறுதிபடுத்தியுள்ளார் என்பதையும் மறக்க வேண்டாம். நலமான பாதையில் நீங்கள் மகிழ்ச்சியோடு அவருடன் பயணித்ததைப்போல கடினமான பாதையிலும் மகிழ்ச்சியுடனும், மனதிருப்தியுடனும் அவரோடு பயணிக்க வேண்டும்.
இயேசு மரணவாக்கை சுமந்து கொண்டு தமது தந்தையோடு நடந்ததுபோல நாமும் நமது கடினமானசூழல்களை சுமந்து கொண்டு நமது ஆண்டவருடன் பின்வாங்காது பயணிப்போம்.
கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்திலே இயேசு உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார். அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். யோவான் 6:59-69.