இயேசு கண்ணீர் விட்டார்.
Jesus wept. (John 11:35)
Jn11:33; Lk19:11,41-44; Rom9:1-3; Heb2:14,15,18; Heb5:7; Heb4:15; Gen43:30; Job30:25; Ps35:13-15; Ps119:136; Isa53:3; Isa63:9; Jer9:1; Jer13:17; Jer14:17; Lam1:16; Lam2:18,19.
இயேசு கண்ணீர் விட்டார். (யோவான் 11:35)
யோவான் 11:33; லூக்கா 19:11,41-44; ரோமர் 9:1-3; எபிரெயர் 2:14,15,18; எபிரெயர் 5:7; எபிரெயர் 4:15; ஆதியாகமம் 43:30; யோபு 30:25; சங்கீதம் 35:13-15; சங்கீதம் 119:136; ஏசாயா 53:3; ஏசாயா 63:9; எரேமியா 9:1; எரேமியா 13:17; எரேமியா 14:17; புலம்பல் 1:16; புலம்பல் 2:18,19.
இயேசு கண்ணீர் விட்டார்:
33,34 ஆம் வசனங்களில் இயேசு ஆவியிலே கலங்கி துயரப்பட்டார் என்பதை தேவன் முன்னிலையில் கண்ணீர்விட்டார் என்று தியானித்தோம். இந்த 35 ஆம் வசனத்தில் சுற்றிலும் இருந்த ஜனங்கள் மத்தியில் ஆத்துமாவில் உடைக்கப்பட்டவராய் கண்ணீர் விட்டார். அதாவது மனிதர்கள் முன்னிலையில் கண்ணீர் விட்டார்.
உலகைப்படைத்தவர், மனிதர்க்கு நன்மை செய்கிறவர், ஆறுதல் கொடுக்கிறவர் அழலாமா? கண்ணீர் விடலாமா? என்ற கேள்வி நமக்குள் எழும்புகின்றது. உண்மைதான். ஒரு தகப்பன் தன் பிள்ளைகளின் வலியைக் கண்டு அழாமல் இருப்பதில்லையே. அதுபோல இயேசுவும் தாம் நேசித்தவர்களின் கண்களில் வெளிப்பட்ட துயரக் கண்ணீரைக் கண்டு அழாமல் இருக்க முடியுமா. அவர் கண்ணீர் விட்டார்.
நன்மையை அனுபவிக்கும் நாம் தீமைகளையும் சகித்து துயரங்களை ஆண்டவரிடம் வெளிப்படுத்துவதில் தவறில்லை. நமது கண்ணீர் மனதுருக்கத்திலிருந்து வரவேண்டுமேயோழிய மற்றவர்களை வசியப்படுத்தும்படியான கண்ணீரை உகுக்கலாகாது. அதை தேவன் விரும்புவதில்லை.
இயேசு கண்ணீர் விட்டார். அதனை எல்லா ஜனங்களும் கண்டு இயேசு லாசருவின் குடும்பத்தை எவ்வளவாய் நேசித்தார் என்று சாட்சி சொன்னார்கள். இந்த சாட்சியம் இவர்கள் இயேசுவை நம்புவதற்கு காரணமாயிற்று.
இயேசுகிறிஸ்து மனதுருக்கமும், மனிதாபிமானமும், மனசாட்சியும் உடையவர். மனிதர்களின் துன்பங்களைக் காண்கிறவர்.
அழுகிறவர்களுடனே அழுங்கள் என்று பவுல் தன் சபையாருக்கு கட்டளை கொடுத்தார். மனுகுலத்தின் துயரங்களில் பங்கெடுப்பதுதான் ஊழியர்களின் திருப்பணியாகும். மனுகுலத்தை அழவைப்பதல்ல, அழுகிறவர்களுடன் பங்கு பெறுவதே சிறப்பு. அவர்களின் துக்கம், அழுகை யாவும் சந்தோஷமாக மாற்றபட சபையானது உழைக்க வேண்டும்.
பெலன், ஐசுவரியம், குடும்பம், உறவுகள் ஆகியவற்றை இழந்தவர்களுடன் சேர்ந்து அழுவதுதான் உண்மையான வாழ்வு. அழுவது மட்டுமல்ல, அழுகையை நிறுத்த முயற்சி செய்வதே சால சிறப்பு.
ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள். மத்தேயு 2:17.