இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதை கண்டு பயந்தார்கள்.
they saw Jesus walking on the sea and drawing near the boat; and they were afraid. (John 6:16-22(19)) Mt14:25,26;Mk4:35-41;6:47-50;Lk24:36-39;Jn14:18;17:25;Job9:8;Ps29:10;93:4.
அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலுமைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள். (யோவான் 6:19)
மத்தேயு 14:25,26; மாற்கு 4:35-41; மாற்கு 6:47-50; லூக்கா 24:36-39; யோவான் 14:18; யோவான் 17:25; யோபு9:8; சங்கீதம் 29:10; சங்கீதம் 93:4.
இயேசு கடலின்மேல் நடந்தார்:
இது ஒரு ஆவிக்குரிய பார்வை கொள்வதற்கான நிகழ்வு அல்ல, இயேசுகிறிஸ்துவில் காணப்பட்ட தெய்வீக அம்சத்தின் வரலாற்று வெளிப்பாடு ஆகும்.
இதனை 3 பகுதியாக நாம் தியானிக்கலாம்:
1. இயேசுவின் தன்மைகள்.
– இது இயேசு ஆவியாகவும் இருக்கிறார் என்பதை காட்டுகிறது.
– இவ்வற்புதம் பிதாவானவர் குமாரனோடு இருந்து கிரியை செய்கிறார் என்பதை காட்டுகிறது.
– சீஷர்கள் மேலிருந்த உள்ளான பார்வை கொண்ட கரிசனையை குறிக்கிறது.
– இது ப.ஏ தீர்க்கதரிசனங்களின் வெளிப்பாடு.
– இயேசுகிறிஸ்துவில் இருந்த அதிகாரம், ஆற்றல், ஆளுகை ஆகிய மூன்றையும் சுட்டிகாட்டுகிறது.
– அவரால் உலகின் எத்தகைய இயற்கையின் பெரும் நிகழ்வுகளையும் கட்டுபடுத்த முடியும் என்பதையும் காட்டுகிறது.
– மனுகுலத்தின் அழிவை அவர் விரும்பவில்லை என்பதையும் காட்டுகிறது.
2. சமுத்திரம் என்ற பேராழி.
– பொங்கி எழும்புவதே அதன் வேலை.
– நுரை தள்ளுவதே அதன் வெளிப்பாடு.
– அமைதியாயிருக்கிறது எனும்போது சீறி எழும் தன்மை கொண்டது.
– தன்னை எதுவும் மேற்கொள்ளாமல் இருக்க பார்த்துகொள்கிறது.
– தன்னை படைத்தவருக்கு மட்டும் தலைவணங்கி – கட்டுபட்டு அமைதியடைகிறது.
3. சீஷர்கள்.
– சீஷர்கள் இயேசு இல்லாமல் பிரயாணம் செய்தனர்.
– பெருங்காற்று, பேரலையின் மத்தியில் கடந்துபோகமுடியும் என்ற அதீத நம்பிக்கை.
– சமுத்திரத்தின் வலிமையை விடவும் தங்கள் இருதய வலிமை சிறியது என்று அறிந்து தடுமாறினார்கள்.
– சீஷர்களின் இடறலையும், தடுமாற்றத்தையும் இயேசு கண்டார்.
– சீஷர்களை பயமுறுத்துவதற்காக இயேசு கடலின்மேல் நடந்து வரவில்லை, மாறாக இரு முக்கிய காரணம் உண்டு.
>கடலின் சீற்றத்தை அமைதிபடுத்த வேண்டும்.
> சீஷர்களுக்குள் விசுவாசத்தை ஊட்டவேண்டும் என்பதாகும்.
அன்பானவர்களே
> இயேசு நம்மோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம்மை கவனிக்கிறார்.
> நமது போராட்டங்களில் அவரும் தம்மை இணைத்துகொள்கிறார்.
> பயங்களினூடே – போராட்டங்களினூடே அமைதியின் வாசல் உண்டு என்பதை கற்று தருகிறார்.
> நாமும் அவரைபோல கடலை கடந்து சோதித்து பார்ப்பதற்கல்ல, நாம் அவர்மேல் முழு நம்பிக்கை – பற்றுறுதி கொள்ளவே அவர் விரும்புகிறார்.
கர்த்தாவே, நீர் ஆற்றல் மிகுந்தவராய் இருப்பதுபோல, உம் குமாரனையும் ஆற்றல் உள்ளவராய் அடையாளப்படுத்தியிருப்பதற்காய் உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன். உம் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின்மேல் நாங்கள் விசுவாசம் உள்ளவர்களாய் இருக்க எங்கள் முன் அற்புதங்களை நடத்துவுக்கிறீர். நாங்கள் இனியும் பின் மாறுகிறவர்களாக அல்ல, முன்னெடுத்து செல்கிறவர்களாக இருக்க உதவும்.