இயேசு… என்ன தேடுகிறீர்கள்?
இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு, என்ன தேடுகிறீர்கள் என்றார், அதற்கு அவர்கள் : ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்: ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். (யோவான் 1:38)
மத்தேயு 6:32; மத்தேயு 7:8; மத்தேயு 12:39; மத்தேயு 13:45; மத்தேயு 28:5; யோவான் 6:26; யோவான் 18:4-8; யோவான் 20:15; ரோமர் 3:11; ரோமர் 10:3; பிலிப்பியர் 2:28; எபிரெயர் 11:6; ஆதியாகமம் 37:15,16..
அவர் அவர்களை பாராதபோது அவர்கள் அவரை பின் தொடர்ந்தனர்.
அவர் இவர்களை கவனிக்கும்போது அவர்கள் வேறு காரியங்களில் கவனம் செலுத்துகிறவர்களாக நடித்தனர்.
ஏன?
– எவருக்காகவாவது ஒற்றுவேலை செய்கிறவர்களாயிருந்தார்களா?
– பயத்தினால் இப்படி நடந்தார்களா?
– கூச்ச சுபாவத்தினால் இப்படி செய்தார்களா?
– அவருக்கு இரகசிய சீடர்களாயிருக்க விரும்பியதினாலா?
அன்று…
இயேசு தம்மை பின்பற்றி வந்தவர்களிடம் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டார்?
இன்று நம்மிடம்…
1. இயேசுவாகிய என்னிடம் என்ன தேடுகிறீர்கள்?
அவர் எல்லாம் துறந்து வந்தார்
அவரிடம் நாம் என்ன தேட முடியும்? பேதுரு, உம்மிடம் நித்திய ஜீவன் உண்டு என்றார். யோவான் 6:68
இன்று நாம் அவரிடம் வீடு, காடு, கார், ஐசுவரியம் தேடுகிறோமே.
இது சரியா?
அவரிடம் இராஜ்யம் உண்டு. லூக்கா 12:31,32; அப்போஸ்தலர் 1:6
ஆனால் இன்று உலக ராஜ்யத்தை அவரிடம் தேடுகிறோமே.
இது சரியா?
2. என்னை நீங்கள் எங்கே தேடுகிறீர்கள்?
அழிந்து போகும் உலகில் இயேசுவை தேட முடியுமா?
உயிர்த்தவரை கல்லறையில் தேட முடியுமா?
மனிதனில் வாழ்பவரை ஜீவ ராசிகளிலும், இயற்கையிலும், இல்லாத பொய் தெய்வங்களிலும், பொய் மத நூல்களிலும் அவரை தேட முடியுமா?
பரலோகில் இருப்பவரை பரலோகில் அல்லவா தேட வேண்டும். 1தெசலோனிக்கேயர் 1:10
3. என்னை தவிர்த்து வேறு யாரை தேடுகிறீர்கள்?
கிறிஸ்துவின் நாமத்தை சொல்லிக்கொண்டு
– ப.ஏ புருஷர்களை பிரசங்கித்துக்கொண்டும், உலகின் ஐசுவரியவாங்களாக அதை தேடிக்கொண்டும்.
– பிற தெய்வங்களின் நாமத்தை தரித்துக்கொண்டு வேதங்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும், உபநிஷத்துகளிலும் தேடுகிறீர்கள்.
– வேறு இயேசுவை தேடிக்கொண்டு வேறு இயேசுவை பிரசங்கிக்கிறீர்கள்.
4. என்னை எதற்காய் தேடுகிறீர்கள்?……. – ஒருவர் எனது வலபக்கம், இடபக்கம் வேண்டுமென்றார்.
– இன்னொருவர் ஆஸ்தியை எனக்கு பங்கிட்டு தாருமென்று என்னை தேடினார்.
– பிறிதானவர்கள் அற்புதம், அடையாள்ம் வேண்டுமென்று தேடி வந்தனர்..
– இன்னும் சிலர் என்னை கொல்லும் படி தேடுகின்றனர்.
நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டுமென்று என்னை தேடி என்னிடம் வருகிறீர்கள்?
அன்பானவர்களே…..
இயேசுவே நீர் மாத்ரம் எனக்கு போதும் என்போமா?