இயேசு அறிந்து
Jesus, knowing that the Father had given all things into His hands. (John 13:3)
John3:35; John 5:22-27; John 17:2; Matthew 11:27; Matthew 28:18; Acts 2:36; 1Corinthians 15:27; Ephesians 1:20-22; Philippians 2:9-11; Hebrews 1:2; Hebrews 2:8,9.
தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும் தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து, (யோவான் 13:3)
யோவான் 3:35; யோவான் 5:22-27; யோவான் 17:2; மத்தேயு 11:27; மத்தேயு 28:18; அப்போஸ்தலர் 2:36; 1கொரிந்தியர் 15:27; எபேசியர் 1:20-22; பிலிப்பியர் 2:9-11; எபிரெயர் 1:2; எபிரெயர் 2:8,9
இயேசுவின் முன்னறிவு:
முன்குறித்தவருக்கு முன்னறியும் திறன் உண்டு. பிறருடையவைகளை அறிவது சுலபமானது. தனக்குரியவைகளை அறிவதோ அரிதானது. விவிலியம் தன்னையும் குறித்து, பிறரையும் குறித்து, தேவனையும் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்று போதிக்கின்றது.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவன் தமது கையில் ஒப்புக்கொடுத்தவைகளைக் குறித்தும், தாம் பிதாவாகிய தேவனிடத்திலிருந்து வந்ததை குறித்தும் தாம் பிதாவினிடம் திரும்ப ஏறிப்போவதையும் குறித்து தெளிவுள்ளவராக இருந்து யாவையும் அறிந்திருந்தார். பிதாவோடு தமக்குள்ள ஆனந்தமயமான உறவை மறுதலிக்கவும் முடியாது, வேண்டாமென்று ஒதுக்கவும் முடியாது.
ஆதாமும் ஏவாளும் தேவனோடுள்ள உறவை விட்டுவிட்டு வலுசர்ப்பத்தோடும் அதன் கூட்டாண்மையோடும் உறவு வைத்ததினால் உண்டான மோசமான விளைவுகளை அறிந்திருந்தார் இயேசு. எனவே பிதா தனக்கு கட்டளையிட்டவைகளையும் பிதா தன் கையில் ஒப்புக்கொடுத்தவைகளையும் நம்புவதும் பின்பற்றுவதும் செயல்படுத்துவதும் அவருடைய வாழ்வும் போஜனமும் ஆகும்.
நாமும்தேவனுடைய ஆவியை பெற்றுள்ளோம். தேவனுடைய ஆழங்களை அறிவதற்காகவே நமக்கு தேவன் தமது ஆவியை தந்துள்ளார். அவர் நமக்கு தந்துள்ள ஆவியை கொண்டு தேவனுடைய விருப்பம் என்ன என்பதை நாம் அறிந்து செயல்படுவதையே அவர் விரும்புகின்றார். நாம் ஒன்றை செய்துவிட்டு அது தேவவிருப்பமாயிருக்க உபவாசம் செய்து போராடுவதை தவிர்த்து அவரின் விருப்பத்தை அறிந்து அதை செயல்படுத்த போராடுவதே சிறப்பானது.
நம்மை நிலை நிறுத்த போராடுவதை விட்டுவிட்டு தேவ விருப்பத்தை அறிந்து நிலை நிறுத்த போராடுவதே சிறப்பு.
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம். ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். 1கொரிந்தியர் 2:10-15.