இயேசு அறிந்து மறுபடியும் விலகி தனியே மலையின்மேல் ஏறினார்.
He departed again to the mountain by Himself alone. (John 6:15)
Mt14:23; Mk1:35; Mk3:9,10; Mk6:45-47; Lk5:16; Lk12:14; Jn2:24,25; Jn7:3,4,12; Heb4:13; Jud8:22; Isa3:6.
ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார். (யோவான் 6:15)
மத்தேயு 14:23; மாற்கு 1:35; மாற்கு 3:9,10; மாற்கு 6:45-47; லூக்கா 5:16; லூக்கா 12:14; யோவான் 2:24,25; யோவான் 7:3,4,12; எபிரெயர் 4:13; நியாயாதிபதிகள் 8:22; ஏசாயா 3:6.
இயேசு விலகிப்போனார்:
இயேசுவை குறித்து பிதாவுக்கு இருவித நோக்கங்கள் உண்டு.
– இயேசுவாக வெளிப்பட்டு பாவிகளை இரட்சிக்க வேண்டும். 1தீமோத்தேயு 1:15
– மேசியாவாக வெளிபட்டு 1000 வருட அரசாட்சியை இந்த பூமியிலே யூதர்களை கொண்டு நிகழ்த்த வேண்டும். இவையிரண்டையும் குறித்த தீர்க்கதரிசனங்கள் ஏசாயாவில் மறைந்துள்ளன. இந்த இரு நோக்கங்களையும் இயேசுகிறிஸ்து ஒன்றோடொன்று குழப்பிக்கொள்ளவில்லை.
இயேசுவாக வெளிப்பட்டு சிலுவையை குறித்தும், பாடுமரணங்களை குறித்தும் மனித மீட்பை குறித்து மட்டுமே பேசினார். அதிலே அவர் உறுதியாகவும் இருந்தார்.
இயேசுவின் கிரியைகளை கண்டு – அவரது உபதேசத்தை கண்டு அவரை மேசியாவாக பிரகடனபடுத்த விரும்பிய யூதர்களுக்கு சிறிதளவும் இடம் தரவில்லை.
இந்த அடிப்படையில்தான் பின்னர் வந்த பவுல் போன்றோர், ‘அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்ககடவன்’ என்று 1கொரிந்தியர்ரி 7:20 ல் கூறியுள்ளார்.
நாம் எதற்காய் அழைக்கப்பட்டோமோ அதற்காய் செயல்படவேண்டும். தேவன் நம்மைகுறித்து வைத்துள்ள நோக்கம் நாளுக்குநாள் மாறுவதில்லை.ரோமர் 11:29.
மூப்பனாய் இருக்க அழைக்கப்பட்டால் மூப்பருடைய வேலையை செய். சுவிசேஷகனாய் இருக்க அழைக்கப்பட்டால் சுவிசேஷகனுடைய வேலையை செய்.
போதகராக இருக்க அழைக்கப்பட்டால் உன் மந்தையை மேய்ப்பாயாக. விசுவாசியாய் இருக்க அழைக்கப்பட்டால் விசுவாசியாயிருந்து உன் ஊழியகாரருக்கு அடங்கியிருந்து பணி செய்.
தேவனுடைய ஆவிக்குரிய பணியை செய்ய அழைக்கப்பட்டவர்கள் தற்சமயம் கட்சிகள், இயக்கங்களை ஆரம்பித்து தேவ நோக்கத்தை விட்டு திசை திரும்புகிறார்கள்.
சமுதாய – கட்சி தலைவர்களாக இருக்க அழைக்கப்பட்டவர்கள் உண்டு. அவர்கள் அப்பணியை செய்வார்கள்.
ஊழியகாரனே….
நீ இயேசுவின் அடிமை என்பதை மறவாதே.
சிலுவையையும், சுவிசேஷத்தையும் சுமப்பதற்காக மட்டுமே நீ அழைக்கப்பட்டுள்ளாய்.
பிஷப் பதவிகள் எல்லாம் சிலுவையையும், சுவிசேஷத்தையும் முன்னணியத்தில் சுமந்து செல்ல வேண்டியவைகள். அலங்காரத்துக்கும், அதிகாரத்துக்கம் அல்ல.
கட்சி நடத்த உன்னை அவர் அழைக்கவில்லை. விட்டுவிடுவாயாக.
கிறிஸ்தவத்தில் பட்டம், பதவிகள் என்று ஒன்றும் கிடையாது. அவைகள் யாவும் திருப்பணிகளின் வெவ்வேறான பரிமாணங்கள்.
அழைப்பை மறவாதே…
அழைத்தவரை விட்டு விலகாதே…
நோக்கம் மாறினால் தியக்கமே சொந்தமாகும்.
விலகிச்செல்வது பின்னிட்டு செல்வதாகும்.
கலப்பையின்மேல் கையை வைத்துவிட்டு பின்னிட்டு பாராதே.
பணத்துக்காகவும், நோக்கத்தைவிட்டு விலகாதே.
பணம் உன்னை பாதாளம் வரையிலும் கொண்டுபோகும்.
இயேசு விலகிப்போனார்.
நீயும் விலகிச்செல்.
கர்த்தாவே நீர் தந்த உம் மகனின் ஆளுகைக்குள் அமரிக்கையாய் வாழ்ந்து வந்தோம். எங்களை சுற்றியுள்ள கோமாளிகளின் நடைமுறைகளை நாங்களும் பின்பற்றி கோமாளிகளாக மாறியுள்ளோம். எங்களை மன்னியும். இனி நாங்கள் இயேசுவாகிய உம் குமாரனைபோல செம்மையாய் வாழ எங்களை ஒப்படைக்கிறோம். சொல்லித்தாரும்.