அறிந்திருந்தார்

விசுவாசியாதவர்களை ஆதிமுதல் இயேசு அறிந்திருந்தார்.

Jesus knew from the beginning who they were who did not believe, and who would betray Him. (John 6 :64)
Jn6:70,71; Jn2:24,25; Jn8:58; Jn13:11; Act15:18; Ro8:29,30; 2Tim2:19; Heb4:13; Ps139:2-4.

ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார், விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: (யோவான் 6:64) 

யோவான் 6:70,71; யோவான் 2:24,25; யோவான் 8:58; யோவான் 13:11; அப்போஸ்தலர் 15:18; ரோமர் 8:29,30; 2தீமோத்தேயு 2:19; எபிரெயர் 4:13; சங்கீதம் 139:2-4.

ஆதிமுதல் அறிந்திருந்தார்:

இயேசுகிறிஸ்து ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறார்.
இயேசுகிறிஸ்து ஆதிமுதல் இருக்கிறார். இயேசுகிறிஸ்து மனிதனை காண்கிறவர். இயேசுகிறிஸ்து மனிதனின் உள்ளத்தில் இருப்பதை அறிகின்றவர். நினைவுகளையும், தன்மைகளையும் அறிகின்றவர்.
இயேசுகிறிஸ்து மறைவாய் இருக்கிறவைகளை அறிகின்றவர். இயேசுகிறிஸ்து தேவனுடைய ஆழங்களையும், பிசாசின் ஆழங்களையும் அறிகின்றவர். இயேசுகிறிஸ்து விசுவாசிக்கிறவர்களை மட்டுமல்ல விசுவாசியாதவர்களையும் அறிகின்றவர்.
இயேசுகிறிஸ்து நல்லவரையும் கெட்டவரையும் அறிகின்றவர். இயேசுகிறிஸ்து உண்மையாய் பணி செய்கிறவரையும், பகட்டுக்காய் பணி செய்பவரையும் அறிகின்றவர். இயேசுகிறிஸ்து நமது முன் நிலையையும் பின் நிலையையும் நன்றாக அறிகின்றவர்.
இயேசுகிறிஸ்து உண்மை சபையையும் தப்பறை சபையையும் அறிகின்றவர். இயேசுகிறிஸ்து நல்ல குடும்பத்தையும், அல்லாத குடும்பத்தையும் அறிகின்றவர்.

விசுவாசியாத யூதர்களை அவர் முன் அறிந்திருந்ததினால் தான் முதலாவது அவர்களுக்குள் விசுவாசத்தை அனல் மூட்ட வந்தார். அந்தோ பரிதாபம். இன்னும் அவிசுவாசம் தொடர்கின்றது.

அன்பானவரே,
நீர் எந்த தளத்தில் நிற்கின்றீர்?விசுவாசபாதையில் முன்னேறுவீர். விசுவாசமே அவிசுவாசத்தை வேரறுக்கும் ஆயுதம்.
மறைந்து வாழ பிரயாசப்படாதீர். மறவாது வாழ பிரயாசப்படுவீர்.

கர்த்தாவே, எங்களுக்குள் விசுவாசத்தை துவக்கியிருக்கும் நீர் அவை எங்களில் இன்னும் வேரூன்றி பலரை விசுவாசத்தில் அனல்மூட்டுகிறதாயிருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்கின்றீர். நாங்கள் ஜீரோவாக அல்லாது ஹீரோவாக இருக்க உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME