இயேசு அப்பங்களை எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடம் கொடுத்தார்.
Jesus took the loaves,and when He had given thanks He distributed them to the disciples. (John 6:10,11)
Mt14;18,19; Mt15:35,36; Mk6:39-41; Mk8:6,7; Lk9:14-16; Lk24:30; Act27:35; Ro14:6; 1Co10:31; 1The5:18; 1Tim4:4,5; 1Sa9:13.
இயேசு:ஜனங்களை உட்காரவையுங்கள்என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஜயாயிரம்பேராயிருந்தார்கள்.
இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்: சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்: அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார். (யோவான் 6:10,11)
மத்தேயு 14;18,19; மத்தேயு 15:35,36; மாற்கு 6:39-41; மாற்கு 8:6,7; லூக்கா 9:14-16; லூக்கா 24:30; அப்போஸ்தலர் 27:35; ரோமர் 14:6; 1கொரிந்தியர் 10:31; 1 தெசலோனிக்கேயர் 5:18; 1தீமோத்தேயு 4:4,5; 1 சாமுவேல் 9:13.
ஸ்தோத்திரம்:
விவ்லியத்தில் ஸ்தோத்திரம் என்ற வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தபட்டுள்ளது.
– ஆதியாகமத்தில் – தேவனுக்கு ஸ்தோத்திரம். ஆதியாகமம் 14:20,
– யாத்,லேவியில் – ஸ்தோத்திரபலி யாத்திராகமம் 18:10; லேவியராகமம் 22:29,
– உபாகமத்தில் தேவனுக்கு ஸ்தோத்திரம் 8:10, கர்த்தர் ஸ்தோத்தரிக்கபட்டவர் 33:20,
– யோசுவா முதல் 1நாளாகமம் வரை தேவனுக்கு ஸ்தோத்திரம்.
– 2நாளாகமத்தில் தேவனுக்கு ஸ்தோத்திரம், ஸ்தோத்திரபலிகள் உள்ளன.
– யோபு வரையிலும் தேவனுக்கு ஸ்தோத்திரம்.
– சங்கீதங்களில் தேவனுக்கு ஸ்தோத்திரம் 28:6; ஸ்தோத்திரபலி 50:14,ஸ்தோத்திரிக்கபட்டவர் 41:13,
– எரேமியாவில் ஸ்தோத்திரபலி 17:26; ஸ்தோத்திர சத்தம் 30:19; ஸ்தோத்திரபலிகள் 33:11,
– எசேக்கியேலில் ஸ்தோத்திரம் 3:12; ஸ்தோத்திரபலி 43:27.
– தானியேல் தேவனை ஸ்தோத்தரித்தான். 6:10,
– மத்தேயுவில் இயேசு ஸ்தோத்திரம் செய்தார்.15:36; ஸ்தோத்திரைக்கபட்டவர் என்று பாலகர் கூறினர் 21:9; ஸ்தோத்திரபாட்டு 26:30.
– மாற்குவிலும், லூக்காவிலும் அவ்வாறே.
– அப்போஸ்தலரில் 27:35;28:15.
– ரோமரில் ஸ்தோத்திரம் செலுத்துதல்1:8; அவர் ஸ்தோத்தரிக்கபட்டவர்1:25;9:5.
– 1கொரிந்தியரில் தேவனுக்கு ஸ்தோத்திரம் 1:15. போஜனம் ஸ்தோத்திரத்துடன் அனுபவிக்க வேண்டும். 10:36. ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு.11:24,
– 2கொரிந்தியரில் 2:14; 4:15; 9:11,12,15.
– எபேசியரில் தேவுக்கு ஸ்தோத்திரம்1:3, எபேசிய விசுவாசிகளுக்காக ஸ்தோத்திரம் 1:16, ஸ்தோத்திரம் செய்தலே தகும் 5:4. பிலிப்பியர் 4:6,
– கொலோ1:5 தேவனுக்கு ஸ்தோத்திரம் , ஸ்தோத்திரத்தோடே அதில் பெருகும் 2:7, ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திரு4:2.
– 1தெசலோனிக்கேயரில் தேவனை ஸ்தோத்தரித்தல் 1:4; 2:13, எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செலுத்துதல் 5:18.
– 2தெசலோனிக்கேயரில் ஸ்தோத்தரிக்க கடனாளி 1:3; 2:13,
– 1தீமோத்தேய்வில் எல்லா மனுஷருக்காக ஸ்தோத்திரம் 2:1, ஸ்தோத்திரத்தோடே அனுபவி 4:3,4.
– எபிரேயரில் எப்பொழுதும் 13:15, 1பேதுரு1:3 ல் தேவனுக்கு ஸ்தோத்திரம் , – வெளிபடுத்தலில் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தும்போது 4:9; 5:13; 7:12; 11:17.
இயேசு ஸ்தோத்திரம் செலுத்தினார். எதற்காக?
1. இதை கிடைக்க செய்ததற்காக ஸ்தோத்திரம்.
2. ஜனங்களை பசியாய் விடாமல் செய்ததற்காக.
3. இதனை பலமடங்காக பெருக செய்ததற்காக.
4. ஜனங்கள் திருப்தியடைய போவதற்காக.
5. தேவனுடைய நாமம் மகிமையடைய போவதற்காக.
6. ஜனங்கள் இயேசுவின்மேல் நம்பிக்கை வைப்பதற்காக.
7. கிறிஸ்துவின் மனதுருக்கம் இதுவாகும்.
நாம் நமது ஸ்தோத்திரங்களை குறித்து சிந்திப்போம்.
கர்த்தாவே, உம் குமாரனைகொண்டு நல்ல மாதிரியை தந்ததற்காக ஸ்தோத்திரம். நாங்கள் எப்பொழுதும், எல்லா இடத்திலேயும் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்திவாழ உதவிடும். எல்லா சூழல்களிலும் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்த கற்றுதாரும். ஸ்தோத்திர வாழ்வு வாழ சொல்லித்தாரும். ஸ்தோத்திரிக்கபட்ட உம்மை தவிர வேறு யாருக்கும் மகிமை செலுத்தாதிருக்க சொல்லிதாரும்.