இயேசுவைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்
This they said, testing Him, that they might have something of which to accuse Him. (Jn8:6)
Nu5:11-31; Nu14:22-24; Ps38:9-15; Ps39:1,2; Pr26:17; Ecc3:7; Jer17:13; Am5:10,13; Mt10:16; Mt12:10; Mt15:23; Mt19:3; Mt16:1; Mt22:15-18; Mt26:63; Lk10:25; Lk11:53,54; Lk20:20-23; 1Co10:9; Jn8:37,59.
அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்.இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். (யோவான் 8:6)
எண்ணாகமம் 5:11-31; எண்ணாகமம் 14:22-24; சங்கீதம் 38:9-15; சங்கீதம் 39:1,2; நீதிமொழிகள் 26:17; பிரசங்கி 3:7; எரேமியா 17:13; ஆமோஸ் 5:10,13; மத்தேயு 10:16; மத்தேயு 12:10; மத்தேயு 15:23; மத்தேயு 19:3; மத்தேயு 16:1; மத்தேயு 22:15-18; மத்தேயு 26:63; லூக்கா 10:25; லூக்கா 11:53,54; லூக்கா 20:20-23; 1கொரிந்தியர் 10:9; யோவான் 8:37,59.
குற்றம் சுமத்தும் ஆவி:
இயேசுகிறிஸ்து பாவமில்லாதவராகவும், குற்றமில்லாதவராகவும் வந்தார்.
அவர் ஊழியத்துக்குள் வந்தபோது அவர்மேல் குற்றசாட்டுகளை சுமத்தும்படியாய் யூத சமய தலைவர்கள் ஈடுபட்டனர்.
குற்றங்கள் நிரூபிக்கபடாமல் போயிருந்தாலும் தொடர்ந்து அவர்மேல் குற்றசாட்டுகளை சுமத்தி வந்தனர்.
யூத சமய தலைவர்களுக்குள் இருந்த பொறாமையின் ஆவியே இயேசுவின் மீது குற்றசாட்டுகளை சுமத்த வைத்தது. இயேசுவோ எந்த குற்றசாட்டுகளுக்கும் பதில் கொடுக்கவும் இல்லை, அதை நிரூபித்து குற்றமற்றவர் என்று காண்பிக்க விரும்பவும் இல்லை.
தன்மீது சுமத்தபட்ட குற்றசாட்டுகள் நிமித்தம் எவர்மேலும் குரோதம் கொள்ளவும் இல்லை,
எவரையும் வெறுக்கவும் இல்லை, எவரிடமும் வாக்குவாதம் பண்ணவும் இல்லை.
அவர் மௌனமாகவே காணப்பட்டார். .
தேவனுடைய ஊழியகாரர்கள்மேல் விசுவாசிகளும், விசுவாசிகள்மேல் பிறமத உறவினர்களும் குற்றம் சுமத்திகொள்வது குற்றபடுத்தும் ஆவியின் குணங்கள் ஆகும். இவ்விதமான குணங்கள் நம்மில் இருக்குமானால் அவைகளை விட்டு விடுவோம்.
குற்றம் செய்கிறவர்களை குற்றபடுத்துவது அவர்களை காப்பாற்றுவதற்கே.
அது தேவனுடைய குணம்.
குற்றம் செய்யாதவர்களை குற்றபடுத்துவது அவர்களை மேலும் புண்படுத்துவதாகும்.
அது பேய்குணம் ஆகும்.
நாம் மற்றவர்களால் குற்றபடுத்தபடாதபடிக்கு குற்றமிழைக்காதவர்களாயிருப்போம். குற்றம் செய்யாது நம்மேல் குற்றம் சுமத்தினால் பொறுமையாயிருப்போம். காலம் தன் கடமையை செய்யும்.
குற்றம் செய்துவிட்டு குற்றம் செய்யாதவன்போல் நடந்துகொள்வதும், குற்றத்தை சுட்டிகாட்டினவர்கள்மேல் எரிச்சலும், கோபமும் கொள்வது பேய்குணம் ஆகும்.
நாம் தேவனின் ஆவியுடையவர்கள். கிறிஸ்துவின் சரீரத்தையும், சாயலையும் உடையவர்கள்.
குற்றத்தை குற்றமாகவும்
குற்றமின்மையை குற்றமின்மையாகவும் பாவிப்போம்.
தூய ஆவியானவர் நமக்குள் இருக்கிறார்.
கர்த்தாவே எங்கள்மேல் குற்றம் சுமத்தும் சாத்தானின் கிரியைகள் எங்களிடம் இராதபடிக்கு எங்களை உம் குமாரனின் ஆவியால் நிரப்பியருளும்.