இயேசுவின் மரணம்.
Death of Jesus:
Mt20:18; Mt26:38; Mt27:3; Jn12:33; Jn18:32; Ro5:6,8,10,17; Ro6:3,4,5; Ro8:10; 1Cor11:26; 1Cor15:54; Phi2:8; Phi3:10; Heb2:9,14,15; Heb5:7; Rev1:18; Rev20:14.
மத்தேயு 20:18; மத்தேயு 26:38; மத்தேயு 27:3; யோவான் 12:33; யோவான் 18:32; ரோமர் 5:6,8,10,17; ரோமர் 6:3,4,5; ரோமர் 8:10; 1கொரிந்தியர் 11:26; 1கொரிந்தியர் 15:54; பிலிப்பியர் 2:8; பிலிப்பியர் 3:10; எபிரெயர் 2:9,14,15; எபிரெயர் 5:7; வெளி1:18; வெளி 20:14.
இயேசு மரித்தார்:
- இது ஒரு வரலாற்று உண்மை. அவர் பிறந்ததும் உண்மை, வாழ்ந்ததும் உண்மை, மரித்ததும் உண்மை.
- இயேசு பாவிகளுக்காக மரித்தார். பாவத்திலே சாகிறவர்கள் உண்டு. பாவத்துக்கு செத்து நீதிக்கு பிழைக்கிறவர்களும் உண்டு. இயேசு பாவத்துக்காக – பாவிகளுக்காக மரித்தார். பாவம் இல்லாதவராக பாவிகளுக்காய் மரித்தார்.
- மனிதனாகப் பிறந்தவனுக்கு மரணம் கட்டாயமே. பாவம் பரிகரிக்கப்படுவது வரையிலும் மரணம் உண்டு. மரணமடையாமல் முக்தியடைய முடியாது. மரணம் ஒருநாள் யாவரையும் சந்தித்தே தீரும். யாரும் அதிலிருந்து விலகி ஓட முடியாது. கிறிஸ்துவும் மரித்தார்.
- பாவத்தை சாகடிக்க, பாவத்துக்கு முடிவு உண்டாக்க மரித்தார்.
- இரண்டுவிதமான மரணமுண்டு. சரீரத்திலே உண்டாகும் மரணம். ஆவியிலே உண்டாகும் மரணம். இயேசு சரீரத்திலே உண்டாகும் மரணத்தை அடைந்தார். ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
- கிறிஸ்துவின் மரணத்தை ஞானஸ்நானம் கொண்டுள்ளது. கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவன் கிறிஸ்துவோடு மரித்து அடக்கம் பண்ணப்படுகிறான். மரணம் பாவத்தை சாகடிப்பதினால் ஞஸ்நானமும் பாவ அழுக்கை சாகடிக்கிறது.
- இயேசுவின் மரணம் அவரின் உயிர்ப்புக்கு முன்னடையாளம். அவர் மரணமடையும்போது பிதா தம் முகத்தை மறைத்தார். ஆனால் அவரின் மரணத்தை 3 நாட்கள் பொறுத்திராது மூன்றாம் நாளிலே மரணகட்டை அவிழ்த்து உயிர்ப்பித்தார்.