இயேசுகிறிஸ்துவின் மனதுருக்கம்…..
இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். (மத்தேயு 14:14)
மத்தேயு 9:36; மத்தேயு 15:32-39; மாற்கு 6:34; மாற்கு 8:1,2; மாற்கு 9:22; லூக்கா 7:13; லூக்கா 19:41; யோவான் 11:33-35; எபிரேயர் 2:17; எபிரேயர் 4:15; எபிரேயர் 5:2.
– பாவம் மனிதர்களை அரிக்கிறதைக் கண்டார்….
– பாவத்தின் எஜமானாகிய சாத்தான் மனுக்குலத்தின் மீது காட்டும் வெறுப்பைக் கண்டார்…
– வியாதிகள், பலவீனங்களினிமித்தம் மனிதர்களுக்குள் உண்டாகும் வேதனையை கண்டார்……
– சக மனிதர்களின் வெறுப்புக்கு ஆளாவதை கண்டார்…..
– வியாதிகள் பலவீனங்களினால் குடும்பங்கள் வறுமைக்குள், குறைவுக்குள் தள்ளப்படுவதை கண்டார்…
இன்று நமது மனதுருக்கம் எப்படிபட்ட மனோபாவத்தை வெளிபடுத்துகிறது என்பதை சுயபரிசோதனை செய்து பார்ப்போமா?