இயேசுவின் சீஷர்கள் ஓரிடத்தில் கூடி வந்தார்கள்

இயேசுவின் சீஷர்கள் ஓரிடத்தில் கூடி வந்தார்கள்.

Simon Peter, others of His disciples were together. (John 21:2) 

Numbers 18:2; Deu 9:10; Ruth 2:23; Ecc 4:9; Matthew 18:20; Matthew 22:41; Matthew 29:18; Luke 24:33; John 20:19; Acts 1:15; Acts 4:31; Acts 10:33; Acts 11:26; Acts 20:8. 

சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, (யோவான் 21:2) 

யோவான் 18:2; உபாகமம் 9:10; ரூத் 2:23; பிரசங்கி 4:9; மத்தேயு 18:20; மத்தேயு 22:41; மத்தேயு 29:18; லூக்கா 24:33; யோவான் 20:19; அப்போஸ்தலர் 1:15; அப்போஸ்தலர் 4:31; அப்போஸ்தலர் 10:33; அப்போஸ்தலர் 11:26; அப்போஸ்தலர் 20:8. 

கூடியிருந்தார்கள்.
இயேசு கிறிஸ்துவை உயிருள்ளவராக கண்ட சீஷர்களில் ஏறக்குறைய 7 பேர்கள் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். எதற்காக கூடிவந்தார்கள் என்று நாம் அறிந்திராவிட்டாலும் பிந்திய பகுதிகளை நாம் கவனிக்கும்போது அவர்களின் நோக்கம் புரிகிறது. இயேசு கிறிஸ்துவோடுள்ள உறவு பிரிந்து போன பின்பு பேதுருவின் தலைமையின் கீழ் 7 பேர்கள் கூடியிருப்பது சாதாரண காரியமல்ல.

இயேசு கிறிஸ்துவோடு கடைசி வரையிலும் கூட இருந்த சீஷர்கள் தவறான முடிவுகளை எடுத்தாலும் அவர்களை வேண்டாமென்று ஒதுக்கி விடுவதற்காக மூன்றரை வருட காலம் பயிற்சி கொடுக்கவில்லை. அவர்களின் எதிர்மறையான முயற்சியானாலும் நேர்மறையான முயற்சியானாலும் இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்துக்கு அவைகள் உட்பட்டிருக்கும். 

கூடிவருதல் ஆசீர்வாதமானது , நன்மையானது, இன்பமானது, ஆரோக்கியமானது பிற்காலங்களில் சபை உயிரோட்டமாக எழும்பி பிரகாசிப்பதற்கு இந்த கூடுகை முக்கியமானது ஆகும். பெந்தே கோஸ்தேயன்று கூடிய கூடுகையைவிடவும் இந்த கூடுகை முக்கியமடைகின்றது. இந்த கூடுகையே பெந்தேகோஸ்தே நாளின் எழுச்சிக்கு அடையாளமாகும். இயேசு உயிர்த்தெழுந்தபின்பு சீஷர்கள் அடிக்கடி கூடிவந்தார்கள் என்பதை அப்போஸ்தலரில் நாம் படிக்கின்றோம். 

ஒரு இயக்கத்தின் வளர்ச்சிக்கு கூடிவருகிற பழக்கம் அவசியமானது. இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் அடிக்கடி கூடிவந்து இயக்கத்தை மேலும் வலுவுள்ளதாக மாற்றுகிறார்கள். கிறிஸ்துவின் சபையின் வளர்ச்சிக்கு ஆத்தும ஆதாய பணிகளோடு சபையின் முக்கியஸ்தர்கள் அடிக்கடி கூடிவந்து ஆலோசித்து,ஜெபித்து காரியங்களை ஒழுங்கு செய்வதை ஆவியானவர் விரும்புகின்றார். ஒரு தனி மனிதனிலிருந்து ஒரு சபை உருவாகிறது. ஒரு சபையின் மூப்பர்களிலிருந்து பல சபைகள் உருவாகின்றது. இதனைதான் இயேசு கிறிஸ்துவும் விரும்புகின்றார். 

கூடிவருதல் மூன்று முக்கிய மனநிலையை வெளிப்படுத்தும். உள்ளத்தில் இருப்பதை ஒளிவு மறைவின்றி உரைக்கவைக்கும் மனநிலை. தலைமைத்துவ பண்பு உருவாகும் மனநிலை, இணைந்த ஐக்கிய மனநிலை ஆகும். சுருங்கச் சொல்லப்போனால் வெளிப்படைதன்மை, தலைமைத்துவம், ஐக்கியம் ஆகும். இந்த மூன்றும் சபைகளில் காணப்படுமானால் அந்த சபையின் வளர்ச்சியை ஒருவரும் தடுக்க இயலாது. இயேசு கிறிஸ்து இந்த மூன்று மனோபாவங்களுக்குள் தமது சீஷர்களை பயிற்றுவித்திருந்தார். அவர்கள் இதன் அடிப்படியில் தான் சபைகளை ஸ்தாபித்தார்கள். 

இக்காலங்களில் வெளிப்படைதன்மை இல்லாததினால்தான் தலைமைத்துவத்துக்கு தகுதியானவர்கள் எழும்ப இயலவில்லை. ஐக்கியமும் ஒருங்கிணைப்பும் சிதைந்து போகின்றது. போதகர்கள் வெளிப்படை தன்மையோடு நடந்துக்கொள்ளாததுவே அனேக சபைகளின் வீழ்ச்சிக்கு காரணமாகின்றது. நல்லது ஆனாலும், கெட்டது ஆனாலும் கூடி பேசி முடிவெடுப்பதுவே சிறந்த ஆரோக்கியம். இதனை பின் பகுதியில் காணமுடிகின்றது. 
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், எர்மோன்மேலும் சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. சங்கீதம் 133,134.

ADD YOUR COMMENT

Powered By Indic IME