நானும் உன்னை ஆக்கினைக்குட்படுத்தவில்லை, நீ போ, இனி பாவம் செய்யாதே

நானும் உன்னை ஆக்கினைக்குட்படுத்தவில்லை, நீ போ, இனி பாவம் செய்யாதே.

 She said,No one, Lord.And Jesus said to her,Neither do I condemn you; go and sin no more. (John8:11) 

Jn5:14; Mt21:28-31; Lk5:32; Lk13:3,5; Lk15:7,10,32; Ro2:4; Ro5:20,21; 1Tim1:15,16; 2Pet3:15; Job34:31; Ps85:8; Pr28:13; Isa1:16-18; Isa55:6; Eze18:30-32.

அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். (யோவான் 8:11) 

யோவான் 5:14; மத்தேயு 21:28-31; லூக்கா 5:32; லூக்கா 13:3,5; லூக்கா 15:7,10,32; ரோமர் 2:4; ரோமர் 5:20,21; 1தீமோத்தேயு 1:15,16; 2பேதுரு 3:15; யோபு 34:31; சங்கீதம் 85:8; நீதிமொழிகள் 28:13; ஏசாயா 1:16-18; ஏசாயா 55:6; எசேக்கியேல் 18:30-32.

இனி பாவம் செய்யாதே:
    நீ செய்த பாவங்களுக்காக தீர்ப்பிடப்படும் இடம் வரைக்கும் கொண்டுவரப்பட்டு அவமானத்தையும், நிந்தையையும், மரண பயத்தையும் அடைந்ததினால் நான் உன்னை ஆக்கினைக்குட்படுத்த விரும்பவில்லை. ஆனால் ஒரு நிபந்தனையுண்டு. அது என்னவெனில் இனி பாவம் செய்யலாகாது என்பதுதான். இனி பாவம் செய்தால் அதற்குரிய தண்டனை நிச்சயம் என்று கூறி எச்சரித்தும், விடுதலை கொடுத்தும் அனுப்பினார்.
கிறிஸ்து ஒரு மனிதனை ஒருமுறை சந்திக்கிறார். அது முதல் சந்திப்பாகும். அந்த சந்திப்பில் மன்னிப்பும், கிருபையும், இரக்கமும், தயவும் உண்டு. எந்த பாவம், குற்றம், பிழை காணப்பட்டாலும் அது மன்னிக்கப்படும். அதற்குரிய தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவர்.
கிறிஸ்துவால் முதல்முறை சந்திக்கப்பட்டு கிருபையினால் மீட்பை பெற்ற எவராயினும் மறுபடியும் அதே தவறையோ, வேறு தவறையோ செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்துதானாக வேண்டும்.
இரத்தத்தினால் சுத்திகரிக்கபடுவதற்கான பாவங்கள் மறுபடியும் செய்தால் இரண்டாவது மீட்பு என்று ஒன்று இல்லை. தண்டனையே மிஞ்சும்.
யோவான் தனது நிருபத்தில் மரணத்துக்கு ஏதுவான பாவம் உண்டு, மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் உண்டு (1யோவா5:16) என்று கூறுகின்றார். குற்றங்கள், சிறு பிழைகள் மன்னிப்பை பெறலாம். ஆனால் அதன் விளைவுகளை அனுபவித்துதானாக வேண்டும். அதிலிருந்து இரண்டாவது விடுதலை என்பது கடினம்.(எபிரெயர் 6:4-8).
மன்னிப்பை பெற்ற நாம் அவரை வாழ்நாள் முழுவதும் சுமந்து திரிவோம். இழந்துவிட்டோமெனில் மீட்பார் ஒருவருமில்லை. எச்சரிக்கை.
கிருபை உள்ளது என்பதினால் தவறு செய்ய இயலாது. கிருபை நம்மை உயர்த்த வேண்டுமெனில் தூயவர்களாக வாழுவோம்.
கர்த்தாவே உம் குமாரன் மூலம் பாவ மன்னிப்பையும், விடுதலையையும் பெற்ற நாங்கள் தொடர்ந்து அவரின் வருகை வரையிலும் நிலைத்திருந்து வாழ எங்களுக்கு உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME