இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று.
Jesus answered and said,This voice did not come because of Me, but for your sake. (John 12:30)
Jn5:34; Jn11:15,42; Acts22:9; 2Cori8:9; Exo19:9.
இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று. (யோவான் 12:30)
யோவான் 5:34; யோவான் 11:15,42; அப்போஸ்தலர் 22:9; 2கொரிந்தியர் 8:9; யாத்திராகமம் 19:9
உங்கள் நிமித்தம் உண்டான சத்தம்:
இயேசுகிறிஸ்துவுக்கு புத்தி புகட்டும்படியாகவோ, ஆலோசனை சொல்லும்படியாகவோ உண்டான சத்தம் அல்ல. இது பிதாவானவர் தமது நாமத்தை தாமே மகிமைப்படுத்துவது குறித்ததாகும். அவரால் படைக்கப்பட்ட ஒருவரும் அவரை மகிமைப்படுத்தாதிருந்தாலும் தாம் அனுப்பிய தமது ஒரே பேறான குமாரன் நிமித்தம் தமது நாமம் மகிமைப்படும் என்பதை அறிந்திருந்தார். பிதாவுக்கு கீழ்படிவதும், பிதா தமக்கு செய்யும்படி பணித்திருப்பதை செய்து முடிப்பதும் பிதாவுக்கு மகிமை வரப்பண்ணுகிறது. அவரால் அனுப்பப்பட்ட தன்னால் பிதா மகிமைப்படுவதுபோல அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ராயேல் ஜனத்தாரால் பிதா மகிமைப்பட வேண்டும் என்பதே இயேசுவின் சிந்தையாக உள்ளது. இஸ்ராயேல் தேவனால் அனுப்பப்பட்ட இயேசுகிறிஸ்துவை ஏற்றுகொண்டும் விசுவாசித்தும் அவரின் வார்த்தைகளை கேட்டும், கீழ்படிந்தும் பிதாவுக்கு மகிமைவர பண்ண வேண்டும் என்பதே பிதாவின் விருப்பம்.
கர்த்தராகிய இயேசுவை ஏற்றுகொண்டு அவர் நமக்கு தந்துள்ள வார்த்தைகளை வாசித்து, தியானித்து அவருக்கு கீழ்படிவதினால் இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய நமது தேவன் மகிமைப்படுகிறார். நம்மை தமது குமாரன் மூலமாக இரட்சித்து ஆவியின் நிறைவை தந்து அவருடைய சர்வ சங்கமாகிய சபையில் வைத்திருப்பதின் நோக்கமே இவ்வுலகில் பிதா மகிமைப்பட வேண்டும் என்பதாகும்.
ஆத்துமாக்களை இரட்சிப்பதின் மூலம் பிதா மகிமைப்படுகிறார். இரட்சிக்கப்படாதோருக்கு சத்தியத்தை சொல்லுவதினால் பிதா மகிமைப்படுகிறார். பாவத்திலும், சாபத்திலும், தரித்திரத்திலும், வியாதியிலும் கிடப்போருக்காக ஜெபிப்பதினாலும் பிதா மகிமைப்படுகிறார்.
அவர் மகிமைப்பட நாம் என்னச் செய்துக் கொண்டிருக்கிறோம்?
நான் வடக்கை நோக்கி கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும், நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன். ஏசாயா43:6,7.