இத்தனை

ஆனாலும் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்?

Andrew-There is a lad here who has five barley loaves and two small fish, but what are they among so many? (John 6:8,9)
Mt14:17; Mt15:33; Mt16:9; Mk6:38; Mk8:19; Lk9:13; Jn11:21,32; 2Co8:9; Rev6:6; Nu11:22; Deu8:8; Deu 32:14; 2Ki4:42-44; 2Ki7:1; Ps78:19,41; Ps81:16; Ps147:14; Pr27:7; Eze27:17.

அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி,

இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஜந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்ளும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். (யோவான் 6:8,9)

மத்தேயு 14:17; மத்தேயு 15:33; மத்தேயு 16:9; மாற்கு 6:38; மாற்கு 8:19; லூக்கா 9:13; யோவான் 11:21,32; 2கொரிந்தியர் 8:9; வெளி6:6; எண்ணாகமம் 11:22; உபாகமம் 8:8; உபாகமம் 32:14; 2 இராஜாக்கள் 4:42-44; 2இராஜாக்கள் 7:1; சங்கீதம் 78:19,41; சங்கீதம் 81:16; சங்கீதம் 147:14; நீதிமொழிகள் 27:7; எசேக்கியா ் 27:17.

இங்கே ஒரு பையன்:

இந்த சிறு பையன் குறித்த காரியங்களை நாம் முதலில் அறியலாம்.
– இவன் ஒரு சிறு பையன்.
– இவன் இயேசுவை பின்தொடர்ந்து வந்துள்ளான்.
– இயேசுவின் செய்தியை கேட்டுகொண்டிருந்தவன்.
– தன்னிடம் இருந்ததை வெளிபடுத்தியவன்.
– தனக்குரியதை பிறர் நன்மைக்காய் கொடுக்க துணிந்தவன்.
– தன்னிடம் இருப்பதைகொண்டு எல்லாருக்கும் கொடுக்க இயலும். அது இயேசுவால் முடியும் என்று நம்பினவன்.
– தன் குறைவை விடவும் பிறர் குறைவை பெரிதாய் நினைத்த தயாள சிந்தயுள்ளவன்.

இந்த பையனை அந்திரேயா இயேசுவிடம் அறிமுகப்படுத்தினான்.
ஆனாலும் சிறுபையனுக்குள் இருந்த விசுவாசம் அந்திரேயாவுக்கு இல்லை. இந்த சிறிய பையனின் சிற்றுண்டி இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு எப்படி ஆகும் என்று சந்தேகப்பட்டான். சந்தேகம் அற்புதத்தை தடுக்கும். ஆனாலும் சிறுபையனை கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய செயல் சந்தேகத்தை மழுங்கடித்தது.

மற்றவர்களின் குறைகளை காணும் கண்களல்ல, மற்றவர்களின் பொருள், பணம், அழகு ஆகியவற்றை காணும் கண்களாய் அல்ல, தேவனுடைய கிரியைகள் வெளிப்படவேண்டிய ‘சிறிய’ வைகளை காணும் கண்கள் அவசியம்.

எம்மாத்திரம்?
– இது சிறியதை பெரியதோடு ஒப்பிடுவதின் வெளிப்பாடு.
– மனுஷ பெலத்தை தேவபெலத்தோடு ஒப்பிடுவதினால் உண்டாவது..
– உலக ஞானத்தை தேவ செயலோடு ஒப்பிடுவதினால் உண்டாவது..
– இயற்கை நியதிக்குள் தேவனை வைக்க நினைப்பதினால் உண்டானது..
– அவசரபுத்தியின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

இச்சொல்லை தேவன் முன்பாக நம்மை தாழ்த்துவதற்கு மாத்திரமே பயன்படுத்தவேண்டும்.

தேவனின் கிரையைகளுக்கு முன்பாக இன்னொன்றை வைத்து இவ்வார்த்தையை கூறலாகாது.

இயேசு அந்திரேயாவை கடிந்துகொள்ளவில்லை. அந்திரேயாவின் சந்தேகத்தில் அல்ல, சிறுபையனின் விசுவாச உற்சாகத்தில் இயேசு நின்றார்.

அற்புதங்கள் யாருக்கு பயன்படவேண்டுமோ அவர்களுக்கிடையில் நாம் தடைகளாக – இடறல்களாக இருக்கலாகாது.

கர்த்தாவே, உமது செயல்களின் முன்னிலையில் நாங்கள் தடைகற்களாக இராது வாய்க்கால்களாக இருக்க உதவி செய்யும். உமது கிரியைகளை பிறருக்கு சுமந்து செல்லும் நல்ல பாத்திரங்களாக இருக்க எங்களை தூய்மைபடுத்தி ஒழுங்குபடுத்தும். தேவகிரியைகள் நடத்தபட தேவையான மூல்பொருளை காணும் கண்கள் எங்களுக்கு தாரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME