இடறலாயிருக்கிறதோ

இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?

He said to them, “Does this offend you? (John 6 :61)
Jn6:64; Jn2:24,25; Jn3:7; Jn21:17; Mt9:4; Mt11:6; Mt13:21,57; Mt24:10; Mk6:3; Heb4:13; Rev2:23.

சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? (யோவான் 6:61) 

யோவான் 6:64; யோவான் 2:24,25; யோவான் 3:7; யோவான் 21:17; மத்தேயு 9:4; மத்தேயு 11:6; மத்தேயு 13:21,57; மத்தேயு 24:10; மாற்கு 6:3; எபிரெயர் 4:13; வெளி 2:23.

இடறலாயிராதேயுங்கள்:

கிறிஸ்துவின் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும், பற்றுறுதிக்கும், பரிசுத்த வாழ்வுக்கும் மாறுபாடாய் செய்வதும், செய்யவைப்பதும் இடறலாயிருக்கின்றது.

ஆதிகாலத்திலிருந்து இதுவரையிலும்…

  • இயேசுவை குறித்து இடறலடைந்திருக்கிறார்கள்( பிறப்பு, மரணம், உயிர்ப்பு, வருகை).
  • இயேசுவின் தன்மைகளைகுறித்து இடறலடைந்திருக்கிறார்கள்.
  • இயேசுவுக்கும் அவருடைய தந்தைக்குமுள்ள தொடர்பை குறித்து இடறலடைந்திருக்கிரார்கள்.
  • இயேசுவின் உபதேசத்தை குறித்து இடறலடைந்திருக்கிறார்கள்.

இன்றும் இந்த இடறல் நடந்துக்கொண்டேயிருக்கின்றது. கிறிஸ்துவினிமித்தம் இடறலடையாதிருப்பதே பாக்கியம்.

இடறல்கள் வருவதினால் நல்லவர், கெட்டவர் என்பதை பகுத்து அறியமுடிகின்றது.

அதேவேளையில் இடறல் உண்டாக்குகிறவர்களுக்கு ஐயோ என்றும் விவிலியம் எச்சரிக்கின்றது.

பாவம், துர் உபதேசங்கள், ஐசுவரியம், குலப்பெருமை, மேட்டிமைகள் போன்றவை இடறல் உண்டாக்குகின்றவைகள்.

ஆதலால் இவைகளை விட்டு விலகியிருங்கள்.
மனதிலே இடறலடையாதிருங்கள்.. வாழ்க்கையில் இடறலடையாதிருங்கள்.. வார்த்தையிலே இடறலடையாதிருங்கள். விசுவாசத்தில் இடறலடையாதிருங்கள். பரிசுத்தத்தில் இடறலடையாதிருங்கள்.

அவர் வரப்போகிறார்.
நமது இருதயத்தின் தன்மைகளின் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்போகிறார். எச்சரிக்கையாய் முன்னேறுவோம்.

கர்த்தாவே நீர் தந்த உம் குமாரனில் நாங்கள் இடறல் அடையாதபடிக்கு எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் வாழ்ந்திருக்க உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME