நீங்கள் இடறலடையாதபடிக்குச் சொன்னேன்.
These things I spoken to u,u should not be made to stumble. (John 16:1)
Matthew 5:29,30; Matthew 11:6; Matthew 13:21,57; Matthew 16:23; Matthew 17:27; Matthew 18:7-9; Matthew 24:10; Matthew 26:31,33; Romans 9:33; Romans 11:9,11; Romans 14:13,20,21; 1Corinthians 1:23; 1Corinthians 8:13; 2Corinthians 6:3; Philippians :11; 1Peter 2:7.
நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். (யோவான் 16:1)
மத்தேயு 5:29,30; மத்தேயு 11:6; மத்தேயு 13:21,57; மத்தேயு 16:23; மத்தேயு 17:27; மத்தேயு 18:7-9; மத்தேயு 24:10; மத்தேயு 26:31,33; ரோமர் 9:33; ரோமர் 11:9,11; ரோமர் 14:13,20,21; 1கொரிந்தியர் 1:23; 1கொரிந்தியர் 8:13; 2கொரிந்தியர் 6:3; பிலிப்பியர் 1:11; 1பேதுரு 2:7.
இடறலடையாதிருங்கள்:
இடறல் என்பதற்கு வழியில் தடைகளை ஏற்படுத்துதல் என்று பொருள். பிறர் காயப்படும்படியாக பேசுவதும், பிறர் பாதிக்கப்படும் படியாக தடைகளை ஏற்படுத்துவதும் ஆகிய எத்தகைய செயலும் இடறலாகவே கருதப்படும். பலவீனமானவைகளை நோக செய்வதும், அவனின் விசுவாசத்தை சோதிப்பதும் இடறலேயாகும். எனக்கு நன்றாய் தெரியும் ஒன்றினால் பிறர் காயப்படவோ, பாதிக்கப்படவோ செய்தால் அதுவும் இடறலே. எனது பழக்க வழக்கம் இன்னொருவருக்கு வேதனையை உருவாக்குமானால் அதுவும் இடறலே. எனது பேச்சுகள் பிறரின் இருயதயத்தில் காயத்தை ஏற்படுத்துமானால் அதுவும் இடறலே.
கர்த்தராகிய இயேசு தமது சீஷர்கள் விசுவாசத்திலிருந்து இடறிபோகாதிருக்கும்படியாகவே துன்புறுதலைக் குறித்து போதிக்கிறார். துன்புறுதல் இல்லை என்று போதிப்பது இடறலை உண்டாக்கும். ஐசுவரியத்தைக் குறித்து பேசுவது இடறலை உண்டாக்கும். கிறிஸ்தவ உபதேசமானது பாடுகளினூடே முன்னேறுவாதாகும்.
இடறல் உண்டாக்கும் கிரியைகள் இவ்வுலகத்தில் உண்டு. விசுவாசத்தின் ஓட்டத்தில் ஏராளமான தடைகள் மனிதர்களாலும், பிசாசுகளினாலும், உலகத்தினாலும் வைக்கப்படுகின்றது. இத்தியாதி தடைகளை தாண்டிதான் நாம் ஓடவேண்டியுள்ளது. சில நேரங்களில் நம்மை சோதித்து பார்க்கும்படியாக தேவனே சில இடறல்களை நம் முன் வைப்பதுண்டு. நம் இருதயத்திலும், சிந்தையிலும் காணப்படும் ஒரு சிறு விஷயம் தேவனுக்கு பிரியமில்லாதிருக்குமானால் அதனை வெளியேற்ற அதை போலொத்த ஒன்றை நம் கண்முன் வைத்து நம்மை சோதிக்கின்றார். அதிலே நாம் விழாதிருந்தால் நம்மை வெற்றியின் பாதையில் கொண்டு செல்வார். விழுந்துவிட்டோமானால் அதிலிருந்து வெளியே வருவதற்காக நாம் விரும்பாத கடினமான பாதையை நம்முன் வைத்து வெற்றிக்கு நேராக கொண்டு வருவார்.
நாம் இடறலடையாதிருப்பது பிறர் விசுவாசத்தில் நிலைத்திருக்க…
நாம் இடறல் உண்டாக்காமல் இருப்பது தேவன் நம்மில் நிலைத்திருக்க.
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துவது அவனுக்கு நலமாயிருக்கும். இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம். ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். உன் கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுள்ளவனாய், எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18:6-10.